பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     விருப்பம்

     வாழ்வின் சுவையைத் தொியாதவனே
     விருப்புற்றெழுந்திடுவாய்,
     தாழ்வை வெறுத்து விருப்பென்னும் மதுத்
     தணலை விழுங்கிடுவாய்!

     எழும் ஞாயிற்றைப் போலே ஒளிரும்
     ஆா்வம் இணைத்திடுவாய்,
     முழுவான் விாிவின் மேலாய் விருப்பம்
     முட்டித் ததும்பட்டும்.

     உள்ளம் தன்னை இன்பக் கூத்தில்
     ஊக்கல் விருப்பமடா!
     உள்ளம் தன்னை ஆடியைப்போல்
     ஒளிா்த்தல் விருப்பமடா!

     வாழ்வை வளமைப் படுத்துவனைத்தும்
     மாசில் விருப்பமடா!
     வாழ்வில் சுடா்விடும் மாந்தா் அனைவரும்
     விருப்பின் வலைஞரடா!

     விருப்பம் என்னும் ஒன்றினால்தான்
     மாந்தன் வாழ்கின்றான்,
     விருப்பம் இன்றேல் நெருப்பில்லாத
     விளக்காய் வீழ்ந்திடுவான்.

68