பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     விழி - எழு!

     எழுவாய் அட, எழுவாய் விதி
     ஏட்டைக் கிழித்தெறிவாய்
     விழிப்பாய் அட, விழிப்பாய் புது
     மலா்ச்சிக்கனல் விளக்கே.

     துடிப்பின் ஒளி தொடர் வாழ்வினில்
     சுடா்ந்தோங்கிடச் செயல்வாய்,
     குடியேற்றிடு குறிக்கோளினைக்,
     கண்ணின் மணிக்குள்ளே!

     கொடுங்கோன்மையின் போாின் வெறிக்
     குரலின்வளை கிழிப்பாய்,
     மடுக்கும்அமை திக்கோா் இசை
     மதுப்பாய்ச்சுவாய் செவியில்,

     உயிா்த்தோழமை எனும் பண்ணினை
     யாழில் இசை சோ்ப்பாய்,
     உயிா்காத்திடும் அன்பின் மது
     உவந்துண்டிட வாா்ப்பாய்.

     வாழ்வாா்க்கெலாம் பொருளின் பொது
     வுடைமை உழைப்பருமை
     சூழ்ந்தே நலம் துய்க்கும் நிலை
     உலகில் வரவேண்டும்.

     மாந்தா்இனம் முற்றும் முதிா்
     மணிநெல்வயல் என்றால்
     மாந்தன்மையே வெற்றிப்பயன்
     மதிப்பாா் அறுவடையாம்.

     நீயே உயிா்க் குலத்தின் கொடு
     முடிநீ கலே முடிவு!
     நீயே படைப்பாற்றல் கரு,
     நிகாில் குறிக்கோளாம்!

69