பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     முழங்காதே

     விரிவான கதிரோனை ஒளிமீனைத்
     தமதாட்சி வினையாளுவார்,
     பெரிதான விதியாணை தனைத்தானே
     சிறையூடு பிணிக்கட்டுமே.

     விழியாக ஒளிவிண்மீன் குறிக்கோளை
     மனம்கொண்டு விரைந்தோடுமே,
     வழியான தனதாணை விதியோடு
     தலைதாழ்த்தி வளைந்தோடுமே,

     பழங்காலப் பழக்கத்தின் வழக்கத்தின்
     விடுவுற்ற பலங்கொண்டவை,
     சுழன்றாலும் சுடர்வெள்ளித் தலையாலே
     துணைப்பாதம் தனைச்சூடுவாய்.

     முழங்காதே விதியாணை கொடிதென்று
     முடிவற்று முழங்காதே நீ.

76