பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     காதலாற்றல்

     காதல் நெஞ்சுக்கு இணையே இல்லை
     கமழும் உணர்ச்சிகள் எல்லாம்
     காதல் குரற்குக் கட்டுப் பட்டே
     கனிந்து பணிந்து நடக்கும்.

     பூவரசம்பூ காதல் நெருப்பால்
     பொன்நெஞ் சாக மலரும்,
     ஏஏ! வைரக் கல்லில் நெஞ்சம்
     எரிதீ துளியும் இல்லை.

     வாழும் உலகில் செலவு மட்டும்
     வருவாயோடு பிறக்கும்,
     சாவும் வாழ்வில் பின்னிக் கிடந்து
     தளிர்க்கும் படைக்கும் புதுமை.

     காதல் வீணையில் மாந்தன் வாழ்வின்
     கைகள் மீட்டும் கம்பி,
     ஆதல் அழிதல் இரண்டினும் மாந்தன்
     ஆண்டவனோடும் வெல்வான்.

     வாழ்தல் இருத்தல் எத்தனைப் பெரிய
     இன்பம் வையம் தனிலே,
     சூழும் ஒவ்வோர் அணுவும் நகைத்துயிர்த்
     துடிப்பால் மலர்ந்து மகிழும்.

     அன்புக் காதல் ஆற்றல் அருமை .
     ஆர்வம் எதையும் பேசேல்,
     உன்றன் காதல் நெஞ்சில் பொறித்தீ,
     நாவில் பாட்டுக் கடலே.

84