பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     வளர்பிறை

     செங்கதிர்த் தோணி கவிழ்ந்தது
     நீல்நிற ஆற்றிலே - அதன்
     அங்கப் பலகை மிதந்ததே
     ஆற்றெழில் ஊற்றிலே.

     வான ஒளித்தட்டில் மாலை
     வடித்தது செங்குருதி - இயற்கை
     ஆன சுடர்வாள் ஞாயிற்றின்
     ஆகம் பிளந்ததுவோ?

     மாலை எனும்மணப் பெண்ணின்
     மணிக்கதிர்க் காதணி - வானம்
     மேலைத் திசையில் களவாடி
     மெல்ல மறைந்ததுவோ?

     நீலப் புனலாற்றில் பொன்னின்
     நிறங்கமழ் தங்கமீன் - இன்பக்
     கோலப் புதுமையாய்க் குதித்து
     கூத்திட்டு உலவிற்றோ ?

86