பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     கமுக்கம்

     மேலை நாட்டின் மேன்மை வன்மை
     மேம்பட் டொலிக்கும பண்ணிலிலை;
     காலை உயர்த்தி வயிற்றைக் காட்டும்
     காமப் பெண்டிர் கண்ணிலிலை.

     சோலை மலர்போல் தோன்றும் முகங்கள்
     சுருளும் கூந்தல் தந்ததிலை;
     வேலை கெடுக்கும் மதத்தை விட்ட
     வெற்றி மிதப்பில் வந்ததிலை;

     நூலை அறிவை இலத்தீன் எழுத்தால்
     நோக்கித் தேக்கிக் கொண்டதிலை;
     மேலை நாட்டின் வன்மை மேன்மை
     மேவும் அறிவியல் ஆக்கியது.

     மூலை முடுக்கில் ஒளிரும் விளக்கும்
     முந்தும் அறிவியல் தேக்கியது.
     மாலை நிழல்போல் நீளும் அறிவு
     மணிநூல் ஆடையாலில்லை;
     ஆலைத் துணியால் அணியும் பாகை
     அறிவைத் தடுக்கும் தடையன்றோ?

97