உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

கும் எரிபொருள் இந்த மண்ணெண்ணெய்தான். அதில் கலப்படம் இல்லாததால் சுட்டு எரிக்கத் தாமதம் செய்வது இல்லை. கலப்படம் இல்லாத ஒரே ஒரு சுத்தமான வஸ்து இந்த மண்ணெண்ணெய்தான் என்பதை இந்த நிகழ்ச்சிகள் நிறுவுகின்றன.

“மாமியார் மருமகள்” உறவு இங்கே சரியாக இருப்பதில்லை என்பது தெரிந்த கதை, அதனால் பெண்ணைக் கொடுக்கும்போது மாமியார் இல்லாமல், நாத்தனார் இல்லாமல் தனிக் குடித்தனம் நடத்தும் தகுதி வாய்ப்பு உடைய மாப்பிள்ளையாக இருந்தால் அவருக்குக் கொஞ்சம் கிராக்கி இருக்கிறது. இதை எல்லாம் பார்த்துத்தான் பெண் தருகிறார்கள்.

அங்கே மாமியார் என்ற ஸ்தானத்தை வகிப்பதற்கே வாய்ப்பில்லாமல் போகிறது. கூட்டுக் குடும்பங்கள், ஒட்டுக் குடித்தனம், ஓரகத்தி, நாத்தனார் இந்த மாதிரி உறவுப் பேச்சுகளே இருப்பதற்கு வாய்ப்பு இல்லை.

பையன் பெண்ணைப் பார்த்து மட்டும் முடிவு செய்வது இல்லை; பழகிப் பின் தைரியப்படுத்திக் கொண்டு இது ஆயிரங்காலத்துப் பயிர் என்று சொல்லாமல் அந்த நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாமல் வாழுங் காலத்துத் துணைவி என்று ஏற்றுக் கொள்கிறான். ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்; அது கொஞ்சம் உறுதிப்பட்டால் ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். அதற்குப் பிறகு பயமில்லாமல் ஒரே கூரையில் தம்பதிகளாக மாறுகின்றனர். இது அந்த வாழ்க்கைமுறை. வலது காலை எடுத்து வைக்கச் சொல்லி அழைப்பதற்கு அங்கு யாரும் இல்லை , அவர்கள் ‘தனிக் குடித்தனம்’ அமைத்துப் புது கம்பெனி! தொடங்குகின்றனர்.