101
ஒருவர் அடிமைப்படுத்த நினைப்பதில்லை; அவன் தன் உடைமை என அவள் ஆதிக்கம் செலுத்தவும் முடிவதில்லை. அதனால் ஒருவரை ஒருவர் மதித்துக் கண்ணியமாக வாழ் நினைக்கின்றனர்.
அவளுடைய சொந்த விஷயங்களில் அவன் தலையிட முடியாது; அதேபோல அவளும் அவனை நச்சரிக்க முடியாது. ஒரு நாள் ‘கால அட்டவணையை’ மற்றொருவருக்குத் தெரிவித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; தேவையானதைத் தெரிவித்துக் கொள்வார்கள். அவரவர்க்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது பாதுகாக்கபடுகிறது.
விவாக ரத்து
விவாக ரத்து செய்துகொள்ள உரிமை, வாய்ப்பு, அங்கீகாரம் இருக்கிறது என்பதாலேயே அது சகஜம் என்று கூறமுடியாது . நம் பண்பாடு பாரம்பரியம் வாழ்க்கை முறை சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுதல் மன நிறைவுகள் இவை விவாக ரத்து என்பதை விரும்பி ஏற்பது இல்லை. சில சமயம் அவசரப்பட்டுச் செய்யும் முடிவுகள் காலத்துக்கும் வேதனைகள் தருகின்றன. இங்கே பொதுவாக அதற்குச் சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாதபோது அதனைத் துணிந்து ஏற்பது என்பதற்கு ஏதோ காரணங்கள் இருக்க வேண்டும். மனைவி விபசாரம் செய்கிறாள் என்பது அறிந்து இனி அவளோடு வாழ முடியாது என்ற மனோ நிலையில் பொதுவாக விவாக ரத்து கோரப் படுகிறது.
கருத்து வேறுபாடுகள்; ஒருவரை ஒருவர் பிடிக்காமை; அழகு குறைவு; கொடுமைப்படுத்துதல்; பிறர் உரிமை