104
மற்றொருவன் அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். அவள் மேலே பறந்து கொண்டிருக்கும்போது மண்ணில் கால் ஊன்றி நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பதும் இல்லை, தேவையும் இல்லை. அவர்களைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் விமரிசிக்கப்படுகின்றன. எனவே உரிமையும், வசதியும், அங்கீகாரமும், வாய்ப்பும் இருக்கும்போது விவாக ரத்து நடைமுறைப் படுத்துவது எங்கும் உள்ளது. இங்கே நடிகையர் பெறும் தனி உரிமையை, வாய்ப்பை, நடைமுறையை அங்கே ஒவ்வொருவரும் பெற்றுள்ளனர். நடிகையர் ஒரு சிலர் போக்கைக்கொண்டு எல்லா நடிகையரும் விவாக ரத்து செய்து கொள்கின்றனர் என்று கூற முடியுமா. அதேபோல்தான் அங்கு.
இங்கே விதிவிலக்குகள் அங்கு நியதியாக்கப்பட்டுள்ளன. அவர்கள் மண்ணெண்ணெயைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை; மற்றவர் காரணமாக மனம் வெறுத்துத் தம்மை மாய்த்துக்கொள்வதில்லை.
அதிர்ச்சிகளை அவர்கள் எதிர் பார்ப்பது இல்லை
‘சாளரங்களில் பூத்தன தாமரை’ என்றான் கம்பன்; அதாவது பெண்கள் சன்னல் வழியாக வெளியே செல்லும் மனிதர்கள், பார்க்க அந்த வீட்டை அலங்கரிக்கிறாள் என்பது அவர் கருத்து. கலியாணமாகாத பெண்கள் நம் கதைகளுக்கு மிகவும் தேவைப்படுகின்றனர்.
‘முதிர் கன்னி’ என்ற காமராஜனின் கவிதைச் சொல் கவனத்துக்கு வருகிறது. இப்படி ஒரு இனம் இந்த நாட்டில் உருவாகி வருவதைக் கவிஞன் காட்டி இருக்கிறான். ‘கனவுப் பறவைகள்’ என்ற கவிதை கணியூர் மது நெஞ்சன் இயற்றியது. அதன் வரிகள் சில: