உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

"குனியும் வரை கொட்டும் சமுதாய இதயங்களின் மையத்தை நோக்கி ஓர் நாள் இந்த மாடுகள் தும்பை அறுத்துக்கொண்டு முட்டத்தான் போகின்றன” என்று கூறுகிறது.

‘மணச் சந்தையில் விலைபோகாத இந்தப் பாடல்கள் ஒவ்வொரு குடும்பங்களிலும் தேக்கப் பட்டியல்கள்’ என்று சித்திரிக்கப்படுகின்ற கன்னிப் பெண்கள் கலியாணம் ஏற்று முடிப்பது; இடை வேளை நடைபெறும் சம்பவங்கள் சுவாரசியமிக்கவை தான். எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிப்பது அதிசய செய்தியாக இருந்தது. எப்படி ஒருவன் தன் பெண்னை யாருக்கு முடிக்கிறான் என்பது அதைவிட, அதிசயமான செய்திதான்.

“கலியாணச் சந்தையில் விலை போகாத இந்தப் பண்டங்கள்” என்ற ஓர் இனத்தைக் குறிக்கின்றார் கவிஞர்.

இவர்களுக்குத் தம் காதலனைத் தேடிக்கொள்ள வாய்ப்பு இல்லை. ஆண்களோடு பேசவும், அவனை அறிய முடியும் வாய்ப்பும் இல்லை; அவனும் நம்பிக்கைக்கு உகந்தவனாக இருப்பது இல்லை; காதல் செய்வான். அது அவனுக்கு ஒரு பரிசோதனை; கிளர்ச்சி; எதையும் செய்து முடிப்பான்; ஆனால் மூன்று முடிச்சு போடச் சொன்னால் அப்பாவின் விக்கிரகத்தை, குடும்பத்தின் தடையுத்தரவை, இயலாத சாதிக் கட்டுப்பாட்டினை, பழகிப்போன வாய் பாட்டுச் சந்தங்களை அதுகூட சரியாக உச்சரிக்காமல் முணுமுணுத்துக் கொண்டு அவளுக்கு அவள் ஒரு கேள்விக்குறியாக மாறச் செய்துவிடுவான்.

மணவாழ்வு என்பதில் மூன்று இயல்கள் அடங்கி இருக்கின்றன. பாலியல்; காதலியல்; மணவியல் இந்த