உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

தவறுகள் ஏற்படும்போது அது இங்கு மிகைப்படுத்தப்படுகிறது; அது அங்கு நியதிப்படுத்தப்படுகிறது. அதனால் பெண்களுக்கு வாழ்வில் அதாவது அந்த இடை வேளையில் எந்தவித அதிர்ச்சிகளும் ஏற்படுவது இல்லை.

மீறல்கள் அவை அதிகப்படும்போது விதிவிலக்குகள் ஆகின்றன. அவற்றை அங்கீகாரம் ஏற்காதபோது அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர், இப்படித் தொடக்கத்தில் அவர்களும் அத்துமீறல்களைச் சந்தித்து இருப்பார்கள். அத்துமீறல்கள் வாழ்க்கை நியதிகள் என்று உணரப்பட்டு அங்கீகாரம் தரப்படும்போது அவை நியதிகளாக மாறுகின்றன. அதனால் பாலியல் பாதிப்புகள் அவர்களை அதிகம் இப்பொழுது தாக்குவது இல்லை; பெற்றோர்கள் பாதிப்புகளில் இருந்து விடுபட்டு விடுவதால் அவர்கள் பொறுப்போடு செயல்பட்டுத் தம்மைத்தாம் காத்துக்கொள்கின்றனர். சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொள்ளாது என்ற அச்சம் இன்மையால் அவர்கள் வாழ்விய லுக்கு முதலிடம் தருகின்றனர். இவற்றை எல்லாம் அதிகம் பொருட்படுத்துவது இல்லை.

கணவனோடு வாழாதவள் விலக்குப் பெற்றவள் என்ற பெயர் மட்டும் பெறுகிறாள் ; உரிமையோடு வாழத் தகுதியுடையவள் அங்கு; இங்கு ‘வாழா வெட்டி’ என்று பட்டம் சூட்டப்பட்டு அவள் ஒதுக்கப்படுகிறாள். பாலியல் பாதிப்புகளை அவர்கள் அதிகம் பொருட்படுத்தாததால் சிக்கல்கள் அதிகம் இல்லை; உரிமை, சுதந்திரம் என்ற மனவியலில் அவர்கள் கவலை இல்லாமல் வாழ்கின்றனர். உரிமை இருக்கிறது என்பதால் அவர்கள் தவறு செய்வது இல்லை; தவறு செய்வதால் வாழும் உரிமையை அவர்கள் இழப்பதில்லை.

மேல் நாட்டுத் தாக்கத்தால் இங்குப் பெண்கள் தம் உரிமையை நாட்ட அடிமைத் தளையினின்று விடுபடு