பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

பட்டனர். இன்று பலவிதமான சக்திகள் செயல்படத் தொடங்கிவிட்டன.

இவற்றை எல்லாம் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் பொருளாதார அடிப்படையில் சமநிலை காணும் வேகத்தில் கட்சிகள் தோன்றின. சமநிலை வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்க முடிந்ததேயன்றிச் செயல் முறையில் சாத்தியப்படவில்லை என்று தெளிவாகியதும் வேறு வகையில் சக்திகள் செயல்படத் தொடங்கின. அதன் விளைவுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை. சமுதாயச் சீர்கேடு.

இவற்றைச் சீர் செய்து செப்பனிடப் புதிய உத்வேகம் நம்பிக்கைகள், செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் நாட்டின் செயல்முறைகள் ஓரளவு ஏன் பெருமளவு செயல்பட்டும் வருகின்றன; அதே சமயத்தில் பிற்போக்கு சக்திகளும் வேகமாகச் செயல்படுகின்றன. இவற்றோடு போராடி மக்களுக்கு அடிப்படைத் தேவைகளும் இளைஞர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையும் ஊட்ட முடியுமா என்பது இன்றைய கேள்வி.

இதற்கு பதில் காண்பது என்பது தனிப்பட்ட ஒருவரால் காண முடியாது; அதைப்பற்றி விமரிசிக்காமல் முடியாத விஷயத்தில் தலையிடாமல் கவுரவமாகத் தப்பித்துக் கொள்ளத்தான் முடியும். நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டால். ஒன்றா இரண்டா ஓராயிரம் கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அது அது அந்தந்தத் துறைகளில் உள்ளவர்களே பதில் சொல்ல முடியும். சந்தனத் தேவன் சொல்வது போல் சுதந்திரத்தை வாங்கிக் கொடுக்க முடிந்தது; அதைச் செய்து முடித்தார்கள். அந்தச் சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைச்சொல்லாமல் விட்டுவிட்டார்கள். அதற்குள் அவர்கள்