பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

ஜீவிய காலம் முடிகிறது; முடித்து வைக்கப்படுகிறது . இப்பொழுது சுதந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விட அதைக் காப்பது எப்படி என்ற பிரச்சனையும் உள்ளது. நமக்கு எதிரிகள் வெளியேயும் அமையலாம்; அது சொல்லமுடியாது; நம்மை நாம் அழித்துக் கொள்ளும் சக்திகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றை அறிந்து நீக்குவது நாம் செய்யத்தக்கது என்பதைச் சொல்ல நினைக்கிறேன். இதை யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது; ‘இங்கிலாந்தில் சில மாதங்கள்’ என்ற தலைப்பில் அந்த தேசங்களைப் பார்த்த பிறகு சில நல்லன அங்கே உள்ளன; அவர்கள் வளர்ச்சி பெற்றவர்கள்; வளர்ந்தவர்கள்; வளர்கிறவர்கள். நாமும் வளர முடியும் என்ற நம்பிக்கை ஊட்டவே இந்த நல்லவைகள் சுட்டிக் காட்டப்பட்டன.

தீமைகள் சில

எந்திர வளர்ச்சி அங்கு மிகுதி; மாந்தர்க்கு உழைக்க வேண்டிய சூழ்நிலைகள் குறைகின்றன. மனித சக்தி, மூளை இயந்திரங்களுக்குப் பொருத்தப்பட்டு வேலை செய்வது அதிசயமான சாதகை. இதனை கம்ப்யூட்டர் சைன்ஸ் (Computer Science) என்று சொல்லி வருகின்றனர்.

ஒரு பாங்கியில் ஞாயிற்றுக்கிழமை அது மூடப்பட்டு இருக்கிறது; உள்ளே ஒரு ஆள்கூட வேலை செய்ததாக இருப்பதாகவும் தெரியவில்லை. வெளியே ஜன்னல் போல ஒரு சிறிய கவுண்டர் இருக்கிறது! அங்கே தன் வங்கி அட்டையை உள்ளே வைத்து ரகசிய எண்ணையும் குறிப்பிட்டுத் தேவையான பணம் எடுக்க முடிகிறது; உள்ளே அந்தச் சீட்டுப் போன சில விநாடிகளில் சன்னலுக்கு வெளியே தாம் விரும்பி எடுக்க நினைக்கும் பணம் நோட்டுகள் வெளியே வந்து விழுகின்றன.