உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சுதந்திரத்துக்கு முன் இருந்த மனோ நிலை; அதற்குப் பின் நம்பிக்கை இருந்தது. ஓரளவு தெளிவு இருந்தது. இன்றைய நிலையில் தெளிவான பொருளாதாரப் பிரச்சனைகள் சிலவற்றைச் சந்திக்க வேண்டியுள்ளன.

(1) ஊழல் முறைகள்; எல்லா நிலையிலும் பணம் கொடுத்துத்தான் எதையும் சாதிக்கமுடிகிறது. இது அதிகமாகிக்கொண்டு வருகிறது.

(2) தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய எந்திரக் கருவிகள் இருப்பதுபோல் கல்விப் பெருக்கும் இருக்கிறது. வேலை வாய்ப்புகள் குறைந்துகொண்டு வருகிறது.

(3) பொருளுக்கும் உயிர்க்கும் பாதுகாப்புக் குறைந்து கொண்டு வருகிறது. எங்கே யார் எதைச் செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

(4) வசதிகளை அனைவரும் அனுபவிக்க விரும்புகின்றனர்; அதன் பொருள்களின் விலைவாசிகள் உயர்கின்றன. பணத்தின் மதிப்புக் குறைகிறது. பணப் பெருக்கம் மிகுகிறது.

சமுதாய நிலையில் ஒரு சில மனோநிலைகள் உரிமைப் போர்கள் மேல் நாட்டுத் தாக்கத்தால் ஏற்பட்டு உள்ளன.

அவற்றுள் நாம் சந்திக்கும் பிரச்சனைகள்.

(1) பெண்கள் மேல் நாட்டினரைப் போல் கல்வியும் தொழிலும் கற்றுச் சரிசமமான வாய்ப்புகளைப் பெற்றுத் தொழில் ஏற்றல் வளருமா?

(2) பெற்றோர்களின் பாதுகாப்பிலும் அவர்கள் பொறுப்பிலும் பிள்ளைகள் வளர்ச்சியும் திட்டங்களும் பெறுதல் நீங்குமா? அவர்கள் தலை நிமிர்ந்து ஆட்சியின் பாதுகாப்பில் திட்டங்களில் உறுதியாக வாழ முடியுமா?

(3) சாதிகள் என்ற பேரால் தேர்தல்கள்; சமுதயாக் கட்டுப்பாடுகள் தகர்க்கப்படுமா? இல்லையா?