பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

ஞர்கள் விரும்பி அவர்களை மணக்க முன்வரவேண்டும்). அவளுக்குத் தக்கபடி. மற்றொருவன் கிடைக்காமலா போவான். அதற்கு வழிவகைகள் உண்டாவதற்கு இந்த மேல் நாட்டு வாழ்வியல் நிச்சயம் வழிகாட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

சமூகவியலும் சட்டவியலும்

அந்த அந்தச் சமூகத்தின் போக்குகளும் தேவைகளையும் ஒட்டியே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. எடுத்துக் காட்டாக இன்றைய அரசியல் பிரச்சனையாக அதிகம் பேசுவது ‘மது விலக்கு’ என்பது. இதற்கு ஓர் வரலாறே நமக்குப் பின்னணியாக இருக்கிறது.

அந்நியர் ஆண்டபோது அவர்களை எதிர்ப்பதற்கு இரண்டு போராட்டங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன; ஒன்று உப்புக் காய்ச்சுதல்; கடலில் கிடைக்கும் வளம் உப்பளம்; அதில் கிடைக்கும் உப்புக்கு வரி செலுத்துவதில்லை என்ற ஓர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்புக்கு இது ஒரு அடையாளப் போராட்டமாக மேற்கொள்ளப்பட்டது. அதே போலக் கள்ளுக்கடை மறியல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு அடிப்படைகள் இருந்தன. வெள்ளையருக்கு எதிர்ப்பு என்பது ஒன்று; மற்றொன்று மக்கள் வாழ்வு சீர்குலைவதைத் தடுப்பது; மற்றொன்று சுதேசிய இயக்கம்; கதர் கட்டுதல் என்பது அதன் விளைவு. இப்பொழுது ‘சுதேசி இயக்கம்’ என்பது முற்றிலும் மறுக்கப்பட்டுவிட்டது. இன்னும் வெளிநாட்டு உற்பத்திப் பொருள்கள் தரம் மிக்கவை என்ற மதிப்பும் நிலவிவருகிறது. இப்பொழுதுதான் வெளி நாட்டு டி.வி. வீடியோக்கள் வராதபடி அதிக வரிவிதிப்பு ஏற்படுத்தியுள்ளார்கள்.

காந்தியடிகளுக்குச் சமுதாய நல்வாழ்வும், முற்போக்கும் தனிமனித வாழ்வை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது என்ற நம்பிக்கை இருந்தது; அதை அவர் அதிகம்