125
அடிச்சுவடி.களைத் திரும்பிப் பார்க்க முடியாது; வயது முதுமையில் முதியவர்தான் பெற்ற மகனாயிற்றே மகளாயிற்றே என்று அதிக உரிமை கொண்டாட முடியாது. இவர் செய்த தவறுகளை எல்லாம் மகன் செய்வான்; அவனும் அப்பாவின் ஸ்தானத்தை அடைகிறான்; தான் அப்பா ஆனபிறகு மற்றொருவரை அவள் அப்பா என்று கூறுவதில் பொருள் இல்லை. அந்த உறவு நாளடைவில் தேய்ந்து விடுகிறது. அவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்து விடுகிறார்கள்.
விருந்தினர் வீட்டுக்குச் செல்வதுபோல இம் முதியவர் இல்லங்களுக்கு இளைய தலைமுறையினர் அவ்வப்பொழுது வந்து போவது உண்டு; பேரன் பேர்த்திகள் தம் பெயரைச் சொல்லித் தாம் படிக்கும் வகுப்புகளைப் பேசிப் புதிதாக வாங்கிய ஆடைகளைக் காட்டி மழலையுரை பேசி மகிழ்விப்பது, உண்டு; அதுவும் காலம் செல்லச் செல்ல அருகிய நிகழ்ச்சியாக ஆதலும் உண்டு.
ஒரு கடை மையம் (shopping centre); அங்கே ஒரு முதியவளைப் பார்க்கிறேன். அந்த வாரத்திற்கு வேண்டிய வீட்டுப் பொருள்கள் வாங்கிக் கொள்கிறாள்; குடிப்பதற்கு வேண்டிய வைன், விஸ்கி, பீர் பாட்டில்கள் வாங்கி வைத்துக் கொள்கிறாள். இவள் தனியே இவ்வாறு செயல்படுகிறாள்.
“யார் இவள்? யாருமே இவளுக்கு உதவிக்கு இல்லையா?”
“இருப்பார்கள்; இருக்கத் தேவை இல்லை; அவர்கள் தனியே இருப்பார்கள் . தமக்கு வேண்டியவற்றைத் தாமே வாங்கிக் கொள்வார்கள”
“வீட்டில் தனியாகவா இருப்பார்கள்?”
“வேறு என்ன செய்ய முடியும்”
“கணவனும் மனைவியுமாக வாழ்கிறவர் கொடுத்து வைத்தவர்கள், விதவைகள் ஆன பிறகு தனிமைப்படுத்தப் படுகின்றனர்."