பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

"மறு மணம்?”

“துணைக்காகச் செய்து கொள்வதும் உண்டு” என்று பதில் தரப்பட்டது.

“பரவாயில்லை”

இது வேடிக்கைக்காகத் தரப்பட்ட பதில். தனிமையிலேயே அவர்கள் காலம் கழிக்க வேண்டியதுதான்.

“பேச்சுத் துண”

“சமுதாய சேவகிகள் அவர்கள் வீடுகளுக்கு அவ்வப்பொழுது போய் வருவார்கள். அவர்கள் பேசுவதை அக் கரையோடு கேட்பார்கள்”

அந்தத் தனிமையை நினைத்தால் பரிதாபமாகவும் இருக்கிறது; பயங்கரமாகவும் இருக்கிறது.

ஒரு அரசு மருத்துவமனை. அதில் ஒரு பகுதி முதிய அவர்களின் இல்லமாகவே விளங்குகிறது, தொண் னூறுக்கு மேற்பட்ட பழுத்த பழங்கள் அங்கே நலிந்து பராமரிக்கப் படுகின்றனர். அவர்களுக்கு இந்தச் சுற்றுப்புற உலகப் பிரமையே இருப்பது இல்லை.

அவ்வப்பொழுது முடிந்தவரை அவர்களைத் தொலைக்காட்சி முன் உட்கார வைக்க முடிகிறது. அவர்களை அங்கே பணி செய்யும் நர்சுகள் கவனித்துக் கொள்கிறார்கள், அவர்களைத் தூக்கிச் சென்று தொட்டிலில் இட்டுக் குளிப்பாட்டுகின்றனர். வயது ஆனவர்கள் கவனிக்கப்படுகிறார்கள்; ஆனால் அவர்கள் தனிமையால் ஒதுக்கப்படுவதால் வாடுகின்றனர்.

அரசு அவர்களைக் கவனித்துக்கொள்கிறது. எல்லா வசதிகளும் தரப்படுகின்றன. இங்கே பொருளாதாரப் பிரச்சனை தீர்ந்துவிடுகிறது, ‘உளவியல்’ பிரச்சனையை மட்டும் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அங்கே நல்ல மருத்துவமும், குளிர் சூழலும், உணவும், தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்க உதவியும் அத்துணையும் உண்டு. ஆனால் தம் மக்களோடு பேரப்