பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

பிள்ளைகளோடு இருந்து இளமையை அனுபவிக்கும் வாய்ப்புகள் அங்கு இல்லை . முதியவர்கள் ஆயுள் நீட்டிப்போடு வாழ்கின்றனர். எண்பது, தொண்ணூறு என்பது அதிசயமல்ல; அறுபத்தைந்துக்கும் மேல் தான் ஓய்வு பெறுகின்றனர். அதற்குப் பிறகு இருபது ஆண்டுகள் சராசரி வாழ முடிகிறது; அதற்கு மேலேயும் எட்டிப் பிடிக்கிறார்கள்!.

நம் நாட்டில் முதியவர்கள் மற்றவர்க்குச் சுமையாக இல்லாமல் தம் கதையைச் சீக்கிரம் முடித்துக் கொள்கின்றனர். ஏதாவது எதிர்பாராத நோய்கள் வந்து ஆயுள் நீட்டிப்பை அதிகப்படுத்திக் கொள்ளாமல் அவர்களை அடக்கி வைக்கிறது; இங்கே, இப்பொழுது தான் சராசரி வயது கொஞ்சம் உயர்ந்து கொண்டு வருகிறது. முதியவர்களுக்குத் தனி இல்லங்கள் அமைக்கப்படுவது இல்லை. ஏன் எனில் முதியவர்களின் இல்லத்தில்தான் அவர்கள் பிள்ளைகள் பேரன் பேர்த்தியர் தங்கித் தொடர்ந்து இருக்கிறார்கள்; அறுந்து கொண்டு அறுத்துக் கொண்டு போகும் உறவுகள் இங்கு இருப்பது இல்லை.

கூட்டுக் குடும்ப அமைப்புகள் பெரியவர்களுக்குப் பாதுகாப்புத் தருகிறது. உத்தியோகம் காரணமாகப் பிள்ளைகளில் ஒரு சிலர் பிரிவை ஏற்படுத்திக் கொண்டு தனிக் குடித்தனம் செய்தாலும் ஒன்று இரண்டு வீட்டோடு ஒட்டிக் கொள்வதால் முதியவர்கள் பிரச்சனை இங்கு விசுவரூபம் எடுப்பதில்லை.

பெற்றோர்களின் பாதுகாப்பிலிருந்து இளைஞர்கள் ஆரம்பத்திலேயே விடுபடுகின்றனர். அதேபோல் அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அவர்கள் விடுபட்டு உள்ளனர்.

இங்கும் ஒரு சில குடும்பங்களில் முதுமையின் தவிப்பு தனிமைத் தாக்கம் இருக்கச் செய்கிறது. உறவுப் பிள்ளைகள் வர போக இருப்பதால் அத்துன்பம் அதிகம் தெரிவதில்லை, பணம் இருந்தால் அதை நாடி மற்றவர்கள் சூழ்