16
“பாரத தேசம் முன்னைய விட பத்தில் ஒரு பங்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில் ஜப்பானியர் நம்மை
விடப் பத்து மடங்கு முன்னேறி வருகிறார்கள்"என்பது அவர் தந்த பதில்.
இவர் மேலும் இதை வேறு வகையாக விளக்கிக் காட்டுகிறார்: “அவர்களை நோக்க நாம் ஒன்பது மடங்கு பின் தங்கிவிட்டோம்” என்று காட்டுகிறார்.
அங்கே தொழிற்சாலைகள் மிகுதி; அதை ஒட்டியே கல்விச்சாலைகளும் பெருகியுள்ளன. தொழிலுக்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இங்கே சோம்பல் மிகுதி; அங்கே செயல்பாடு மிகுதி என்று கூறுகிறார். இன்னும் அந்தச் சொற்கள் நம் செவியில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
இன்றைய பாரத தேசம்
“ருஷ்யப் புரட்சி மார்க்சியத்தை அறிவித்தது. ‘மனிதனை நேசி’ என்ற புதிய தத்துவத்தைப் பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் அரசியல் சமுதாயம், தனிமனித உறவுகள் ஒழுக்கப் பிரச்சனைகள் அணுகி அலசிக் காட்டப்படுகின்றன. உழைப்புக்கும் பிழைப்புக்கும் உள்ள அவசியத்தை மார்க்சியம் வற்புறுத்துகிறது. உழைப்பின் சேமிப்பு முதல் எனப்படுகிறது. அந்த முதல் பாரம்பரிய உரிமையாகும் போது தனி மனிதன் மற்றவன் உழைப்பில் வாழத் தொடங்குகிறான், அதற்குத்தான் சொத்துரிமை என்று கூறப்படுகிறது. வசதி பெற்றவன் வீட்டில் பிறந்துவிட்டால் அவன் அந்தச் சொத்துக்கு வாரிசாகிவிடுகிறான்; இல்லாதவன் இல்லாமையிலிருந்து வாழ்க்கையைத் தொடங்குகிறான். நாட்டின் பாதுகாப்பை நம்பி நாம் வாழ முடியவதில்லை; வாழ்க்கை