உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இருபத்தைந்து பவுண்டு அளவு மாதாமாதம் தரப்படு கிறது; தாய்ப் பாலை மட்டும் அக்குழந்தை உண்டு வளரவில்லை; நேரிடையாக அரசாங்கம் தரும் மானியத் தொகையையும் பெறுகிறது, நாட்டின் மகன் என்ற அங்கீகாரம் தரப்படுகிறது. அதே போல வயது வந்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை இல்லை என்றால் பட்டினி கிடக்கத் தேவை இல்லை. வாழ்க்கைப் பணம் அ சாங்கம் தருகிறது. வேலையே தேடாமல் ஒருவனும் ஒழித்தியும் இந்த வாழ்க்கைப் பணத்தைப் பெற்றுக் குடும்பம் நடத்த முடிகிறது; குழந்தைகளையும் பெற்றுக்கொள்கிறார்கள்; உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு இம் மூன்றும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மக்களின் உயிர் வாழ்வுக்கு நாட்டு அரசாங்கம் பொறுப்பேற்று இருக்கிறது. நம் நாட்டில் கல்வியும் மருத்துவமும் ஆட்சியின் பொறுப்பு என்ற நிலை கொள்கை அளவில் சொல்லப்படுகிறது; முழுப் பொறுப்பை இந்த வகையில் ஆட்சி ஏற்கவில்லை. கல்வி இன்று தனியாரின் கைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. அதை வைத்து ஒரு கொள்ளையே நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கொள்ளைக்கு “நன்கொடை” {donation) என்ற பெயர் வழங்கப்படுகிறது. மருத்துவம் இஞ்சினியரிங் எல்லாம் பொருளில்லார்க்கு இல்லை என்ற நியதி சொல்லப்பட்டுவிட்டது. சாதாரண மருத்துவ உதவி ஆட்சியாளர் நடத்தும் மருத்துவமனையில் தரப்படுகிறது. வசதி படைத்தவர்கள் அவர்களை ஒட்டி மற்றவர்களும் தனியார் மருத்துவத்தை நாடும் நிலை இங்கு வளர்ந்துவருகிறது.

இங்கிலாந்தில் ஒரு வியத்தகு அமைப்பு உள்ளது; இயங்கி வருகிறது. ‘தனியர் மருத்துவ மனைகள்’ அந்த