உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

இந்தத் திட்டம் அவற்றைப் போன்ற ஒன்று என்பதை உணர முடிகிறது. இந்த வகையில் நாம் வளர்ச்சிப் பாதையில் இயங்கி வருகிறோம் என்பதை உணரமுடிகிறது.

இரவலர்கள் இல்லை

‘வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்’ என்பது அயோத்தி நகரத்தைப் பற்றிக் கம்பன் கண்ட கற்பனை. வள்ளல்களும் இரவலர்களும் வாழ்ந்த நாடு இது; கவிஞர்கள் புவியாளும் மன்னர்களைப் புகழ்பாடி வாழவேண்டிய சூழ்நிலையும் இந்த நாட்டில் இருந்துள்ளது, அவர்கள் தரும் பரிசிலை நம்பிக் கவிஞர்களின் சிறப்பும் உயர்வும் கிடக்கவேண்டி இருந்தது.

கம்பனுக்கே இந்தப் போக்குப் பிடிக்கவில்லை போலும். ஒரு புரட்சிக் கருத்தைத் தோற்றுவிக்கிறான். இருப்பவர்கள் தம்மை வள்ளல்கள் என்று கூறிக்கொள்வதற்கே காரணம் இல்லாதவர்கள் கையேந்தி நிற்பதால்தான். வறுமை என்ற ஒன்று இருந்தால்தானே வள்ளல் என்ற இனம் ஒன்று தோன்றமுடியும். வள்ளல்களே இருக்கக் கூடாது கொடையாளிகள் இருப்பது நாட்டுக்கு அவமானம் என்ற ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்தான். வறுமையின் வாட்டமே வள்ளல்களின் ஏற்றத்திற்குக் காரணம் என்பதை அறிந்த கம்பன் அந்த நாட்டில் வள்ளல்கள் இல்லை என்ற கற்பனையைத் தோற்றுவித்தான். இது கலை மெரு கோடு கூடிய கூற்று.

மனிதன் தன் மானத்தோடு வாழவேண்டும்; தனக்குச் சேர வேண்டியது அல்லாததைப் பெறுவது இழுக்கு; அது தவறு என்ற உணர்வு தன்மானத்தின் அடிப்படையில் எழுவதாகும். இங்கே பிச்சைக்காரர்கள் குறைந்துவிட்டார்கள்; அதை ஒரு தொழிலாக நடத்தும் கூட்டம் மறைந்து விட்டது என்று கூறலாம். கோயில்களின் முன் தரும-