22
சிந்தனை உள்ளவர்கள் செயல்பாட்டுக்குத் துணை செய்ய ஒரு சிலர் கை நீட்டி வாங்கிக் கோயிலை அறநிலையமாக மாற்ற உதவி வருகின்றனர். உழைக்காமல் கையேந்திப் பிழைப்பது பிச்சைத் தொழில்; இன்று அது சுகபோக வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாக மாறிவிட்டது; எதையும் ‘அது’ தராமல் சாதிக்க முடியாது என்ற நியதி வளர்ந்துவிட்ட பிறகு இனி அதைப் பற்றி எழுதிப் பயன் என்ன? ஒழுங்கீனங்கள் நியதியாகி விட்ட பிறகு நேர்மை என்பதைப் பற்றிப் பேசுவது பழங்காலக் காவியத்தை ரசிப்பது போன்றது ஆகும். இது எந்த அளவு நம் சமுதாயத்தில் ஊடுருவி நிற்கிறது என்பதைப் ‘பணம் பத்தும் செய்யும்’ என்ற தமிழ்த் திரைப்படம் மிக அழகாகக் காட்டியுள்ளது. இலக்கியம் காலத்தின் கண்ணாடி; திரைப்படங்களும் இப்படிக் காலத்தின் கண்ணாடியாக இயங்க முடியும் என்பதற்கு ஊழல் மலிவைப் பற்றிக் காட்டும் இச்சித்திரம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
அங்கே கை நீட்டிப் பிச்சை கேட்கும் இரவலர்களைக் காணமுடியவில்லை; லஞ்சம் கொடுத்துக் காரியங்களைச் சாதிக்க முடியும் என்ற சித்தாந்தம் அங்கே குடிபுகவில்லை. இன்று பாரத தேசத்தில் கடும் நோயாகப் பரவி உள்ளது ஊழல் என்பதுதான். இதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்; தவிர்க்க முடியாத அன்றாட வாழ்க்கை நடைமுறை என்று இது ஆகிவிட்டது. என்ன செய்வது? ‘திரித்தவரை கயிறு’ என்ற சித்தாந்தத்தின் விளைவுதான் இந்த நிலைமை. வாழ்க பாரதம்!
சுமக்கிறவன் இல்லை
ரயிலடியில் விமான நிலையத்தில் கடை அங்காடிகளில் மூட்டைகளைத் தூக்க அங்குக் கூலியாட்களைக் காண முடியாது; இதைப் பலர் பயண நூல்களில் குறிப்பிட்டும்