உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

'சிகை அலங்காரம்’ அவர்கள் பெரிதும் கவனம் செலுத்துகின்றனர். மயிர் முடி வெட்டும் அலங்காரக் கடைகளில் பெண்களே பெரிதும் பணி செய்கின்றனர். அவர்கள் அந்தத் தொழிலில் கற்றுத் தேர்ந்து நற்சான்று இதழ்கள் வாங்கியவர்கள். டாக்டர்கள் தகுதி பெற்றால்தான் அந்தத் தொழில் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கும் சான்றிதழ்கள் பெற்றவர்களே அனுமதிக்கப்படுகின்றனர். இருக்கவே இருக்கிறது ஒரு சலூன் வைத்துப் பிழைத்துக்கொள்ளலாம் என்று எளிதாகப் பேச முடி யாது; பயிற்சி பெற்றவர்கள் நடத்தும் ஒப்பனைத் தொழில் அது.

பெண்கள் மயிர் முடி ஒப்பனைக்கு அதிகம் கவனம் செலுத்துகின்றனர். அடிக்கடி முடி ஒப்பனையை (Style மாற்றிக் கொண்டே இருப்பதில் இளம் தலைமுறையினர் ஆர்வம் செலுத்துகின்றனர். அவற்றிற்கு நிறமும் ஊட்டுகின்றனர். சலூன்களில் ஆண்களும் மயிர்முடி வெட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் அங்கே முக க்ஷவரம் செய்து கொள்ள முடியாது; அவர்கள் செய்யமாட்டார்கள். கத்திரி பிடிப்பார்களே தவிரக் கத்தி பிடிப்பது இல்லை; அவர்கள் தானே வீட்டில் சுய மழித்தல் செய்து கொள்ள வேண்டியதுதான்.

உறங்குவதற்கும் அவர்கள் தக்க வசதிகளைச் செய்து கொள்கிறார்கள், கட்டாந் தரையில் பாய் போட்டுப் படுத்துக்கொள்ள முடியாது; உடல் சில்லிட்டுப் போகும்; பஞ்சு மெத்தைகளும், கெட்டித் துப்பட்டிகளும், பஞ்சுப் போர்வைகளும் அவர்களுக்குச் சூடு தருகின்றன. குழந்தைகளைத் தம் அறையில் படுக்கவைப்பது இல்லை. அவர்களைத் தனி அறையில் படுக்கவைக்கிறார்கள். தம் பக்கத்தில் போட்டுக்கொண்டு தாய்மார்கள் அரவனைத்து உறங்க வைப்பது இல்லை. நம் இந்தியக் குடும்பங்களும் அங்கே இந்த மேல் நாட்டுப் பாணியைப் பின்பற்றுகின்றனர்.