28
வெளியே சென்றால் செம்மையாக உடுத்துவது என்பது அவர்கள் அன்றாட வாழ்க்கை முறை.
அங்கே மூன்று நிற மக்களைக் காணமுடிகிறது; சுதேசிகள் அவர்கள் வெள்ளையர்கள்; நீக்ரோக்கள் கருப்பர்கள்; இந்தியர்கள் அவர்கள் நிறம் இன்ன நிறம் என்று அறுதியிட்டுக் கூறமுடியாது; கருப்பும் அல்ல; வெளுப்பும் அல்ல; சிகப்பும் அல்ல; அதனால் அவர்களை எப்படி அழைப்பது? சிக்கலான நிலைமைதான், நாம் பொதுவாகப் பல்வகை நிறம் பெற்றிருப்பதால் நிற இனம் (Coloured people) என்று அழைக்கப்படுகிறோம்.
வெள்ளையர்களுக்குக் கருப்பு நிறம் என்பது வெறுக்கத் தக்க நிறம் அல்ல; நீக்ரோக்களை அவர்கள் விரும்பி அவர்களோடு பழகுகின்றனர். இணைந்தும் வாழ்க்கை நடத்துகின்றனர். அதற்கு மற்றுமோர் காரணம் இருக்கிறது. கலாச்சாரத்தில் மொழியில் இருவருக்கும் வேறுபாடற்ற நிலைமை என்றுதான் கூற முடியும். ஒரே பள்ளியில் கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வதும் வேறுபாடு இல்லாமல் பழகுவதும் காரணமாக இருக்கலாம்.
இயற்கை அவர்களுக்கு வெள்ளை நிறத்தைத் தந்திருக்கிறது; ஊட்டமான உணவு; வாட்டமான உடல்கட்டு; சுருசுருப்பான போக்கு; செழுமையான மனோநிலை ஒருவரைப் பார்த்தால் மற்றவர்களைப் பார்க்க முடியாது; பொதுவாக நம் நாட்டில் அழகு பேதங்களுக்கு நிறம் அடிப்படையாகிறது; அங்கே அனைவரும் நல்ல கவர்ச்சியான நிறம் பெற்றிருப்பதால் அநேகமாக எல்லோரும் அழகாகவே இருக்கின்றனர். முக வெட்டு மூக்கு உயரம் எல்லாம் கவர்ச்சியாகவே இருக்கின்றனர். என்னோடு ஐரோப்பியப் பயணம் வந்த தமிழ் நாட்டு நண்பர் ஒருவர் சொன்னது குறிப்பிடாமல் இருக்க முடியாது. “இங்கிலாந்தில் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்; என்றாலும்