உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

பேதமில்லாமல் ஒரே வகையாக இருக்கிறார்கள். மிகச் சிறந்த பேரழகிகள் என்று கூறமுடியாது என்றார்.

அப்படியானால் அவர் மதிப்பீட்டின்படி வேறு ஓர் கருத்து தைத்திருக்கிறார் என்பது தெரிந்தது. அவர் ஜெர்மனியில் இந்த வார்த்தை சொன்னார். பாரிஸ் பெண்கள்தான் உலகத்திலேயே பேரழகிகள். ஒருவருக்கொருவர் வேறுபாடு இருக்கிறது என்று சுட்டிக் கூறினார்; அவர் மதிப்பீடு வியப்பைத் தந்தது.

என்னைப் பொறுத்தவரை ஜெர்மனிய நாட்டுப் பெண்கள் நல்ல உடற்கட்டும் அழகும் பெற்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஜெர்மனி நல்ல வளம் மிக்க பூமி; உயரம்; கட்டான உடல்: இலை அவர்கள் கவர்ச்சிக்குக் காரணம் என நினைக்கிறேன்.

அங்கே அவர்கள் முழு வெள்ளை நிறத்தை விரும்புவதில்லை; அது பழுப்பு நிறம் பெறுவதைப் பெரிதும் விரும்புகிறார்கள். சற்று வெய்யில் காணப்பட்டால் கதிரவன் தன் ஒளிக்கதிர்களைச் சூடாக அள்ளிச் சொரிந்தால் அவர்களுக்குக் கொள்ளை மகிழ்ச்சி; பூங்காக்களில் வெட்ட வெளியில் கடற்கரை ஓர மணற்பாங்கில் குப்புறப் படுத்தும் அவர்கள் தம் ஆடைகளை அப்புறப்படுத்தித் தேவையான அளவு உடலை மறைத்துச் சூடுபடுத்திக்கொள்கின்றனர். அதற்காகவே அவர்கள் விடுமுறைகள் எடுத்து நாளெல்லாம் காய்ந்து நிறத்தைப் பதப்படுத்திப் பழுப்பு நிறமாக்கி அதைப் பெருமையாக மற்றவர்களுக்குச் சொல்லிக்கொள்கின்றனர்.

வயது அதிகம் ஆக அதைக் குறைத்துக் காட்ட எவரும் பாடுபடுவது இயற்கை; இதழ்கள் சிவப்பாக இருக்க நிறம் தீட்டப்படுகின்றன. வெளியில் வரும்பொழுது ஒப்பனை இன்றி அவர்கள் வெளிவர விரும்பமாட்டார்கள், வயது