உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

ஹைட் பார்க்

லண்டனில் ‘ஹைட் பார்க்’ என்றும், அதை அடுத்து கிரீன் பார்க் என்றும் இரண்டு பூங்காக்கள் இருக்கின்றன, நெருக்கடி மிக்க நகரத்தைக் கவின் மிகு நகரமாக அமைத்திருப்பது பாராட்டத்தக்கதாகும். பழைய டெல்லி, பழைய வண்ணாரப்பேட்டை இவற்றைப் பார்க்கும்போது நகரங்கள் மக்கள் மட்டும் வாழும் இடங்கள்; தெருக்களுக்கு இடம் கிடையாது என்று பிரகடனம் செய்வது போல சந்து பொந்துகளும் பழங் கட்டிடங்களும் அடைத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அந்த மாதிரி நிலைகள் இங்கு இல்லை, மரஞ்செடிகளும் பூங்காக்களும் மாந்தரிடையே தலைநிமிர்ந்து வாழும் இடங்களாக அந்த மாநகரங்கள் விளங்குகின்றன. இந்த நிலை பாரிஸ் ஜெர்மனி எந்தத் தேசத்து நகரிலும் காணலாம். லண்டன் மா நரில் உள்ள ஹைட் பார்க் இரண்டு அல்லது மூன்று மைல் நீள அகலம் இருக்கும் என்று நினைக்கிறேன். பூங்காவில் புல் தரைகள் , விளையாடுமிடங்கள் மிகுதி; அங்கங்கே ஓய்வு கொள்ளச் சாய்வு நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. ‘பிக்னிக்’ வருபவர் குடும்பம் குடும்பமாக வந்து ஆர அமர இருந்து உண்டு திரிந்து சிரித்து விளையாடி இன்பமாகப் பொழுது போக்குகின்றனர். இது அதிசயமல்ல; அந்தப் பார்க்கின் கீழே தரை மட்டத்தில் கீழ் கார்கள் நிற்கச் சுரங்க வழிகள் அமைத்திருப்பதுதான் வியப்பாக உள்ளது. இது எவ்வளவு பெரிய சாதனை; மைல் கணக்கில் கீழே சிமெண்டு கட்டிடங்கள், வெளிச்ச அமைப்புகள் கார்கள் நிற்க இடம் செய்யப்பட்டு இருக்கிறது. நகரத்தின் சுற்றுப்புற அங்காடிகள், ஆபீசுகள் அவர்கள் கட்டணம் செலுத்திக் கார்களை அங்கு நிறுத்தி வைக்கின்றனர். விண்ணைப் பிளந்து விமானங்கள் செல்வது வியப்பல்ல. மண்ணைக் குடைந்து ரயில்கள் செல்வதும், கார்கள்