பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

பிட்ட இடங்களாக அமைந்தன், பாதாள ரயிலில் விக்டோரியா ஸ்டேஷனில் ஏறுவது வழக்கம். விக்டோரியா நம் சென்னை சென்ட்ரல் போன்றது. அங்கே ‘அடிநிலை’ வண்டிகளுக்குப் பக்கத்தில் ரயில் நிலையம் இருக்கிறது. அடிநிலை ரயிலில் செல்ல வரைபடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். யாரையும் வாய் திறந்து கேட்க முடியாது; பதில் சொல்ல மாட்டார்கள்; வரைபடமே நமக்கு வழிகாட்டி. இதில் இரண்டு மூன்று நிறங்களில் கோடுகள் இட்டு ரயில் வழிகளைப் பிரித்து இருக்கிறார்கள். நாற்பது பென்ஸ் டிக்கெட் வாங்கலாம். அதிக தூரம் போக வேண்டுமானால் ஐம்பது பென்ஸ் டிக்கட்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம். ஒரு முறை வெளியே வந்துவிட்டால் அந்தச் சீட்டுப் பயன்படாது, நீலம் சிகப்பு மஞ்சள் இக்கோடுகள் பாதைகளை வேறு படுத்திக் காட்டும். நாம் மைலாப்பூர் போகவேண்டுமானால் சென்ட்ரலில் இறங்கி மற்றோர் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அடி நிலையில் மூன்று நிலைகளில் அடுக்குகளில் வண்டிகள் ஓடுகின்றன. ஒரே சம நிலையில் இவை ஓடவில்லை. எனவே இடம் மாறும்போது படி ஏற்றங்கள் (escalators) ஏறி இறங்கவேண்டும். வழியில் நினைக்கிறேன் ஒருவன் இசைமீட்டிப் பாடிக்கொண்டிருந்தான். காசும் வருகிறவர் போகிறவர் போட்டுக்கொண்டிருந்தார்கள். இது ஒரு புதுமையாகவே இருந்தது; இரவலர்களே இல்லாத அந்த நாட்டில் பாட்டுப் பாடிக் காசு பெறும் காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவனுக்கு இசைக்கலை இருக்கிறது; அதைக் காட்டி மற்றவர்களை மகிழவைத்துக் காசு அவர்கள் போட்டுச் செல்ல அது பெறுவதும் ஒரு கண்ணியமான தொழிலாகவே அவர் கருதியிருக்க வேண்டும்.

அங்கு நான் வழி தெரியாமல் திண்டாடினேன்; எப்படி எந்த பிளாட்பாரத்தில் ரயில் மாறுவது என்பது தெரிய