பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

வரோ சேதமடைந்தவரோ இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிக்கு அறிவித்த சில நாள்களிலேயே இழப்பு ஈடு செய்யப்படுகிறது. இத்தகைய பாதுகாப்புகள் இருப்பதால் வீட்டை மறந்து அவர்கள் சுற்றுலாப் பயணம் செய்ய முடிகிறது.

ஓர் ஒழுங்கான அமைப்பு முறையில் சுற்றுலா நடைபெறுவதால் தைரியமாக எந்தக் கவலையும் இல்லாமல் அந்த நாடுகளைச் சுற்றிப் பார்க்க முடிகிறது. தங்கும் ஹோட்டல்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை, அவர்களிடம் நாம் நம்மை ஒப்படைத்துக் கொள்கிறோம். அவர்கள் திட்டமிட்டபடி நாம் விரும்பும் தேசங்களுக்கு அழைத்துச் சென்று முக்கியமான இடங்களைக் காட்டித் தக்க வழிகாட்டிகளைக் கொண்டு விளக்கமும் சொல்லி நமக்கு அந்த நாட்டின் சிறப்புகளை அறிவுறுத்துகின்றனர்.

பகலெல்லாம் பேருந்து ஓடிக்கொண்டே இருக்கிறது; மாலை வேளைகளில் குறிப்பிட்ட நகரங்களை அடைகின்றன. அங்கே உணவுக்கும் தங்குவதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்கின்றனர். மறுபடியும் மறுநாள் காலை ஏழு எட்டு மணிக்கெல்லாம் வண்டி ஏறவேண்டியதுதான். ஒரு வாரச் சுற்றுப்பயணத்தில் பெல்ஜியம், ஹாலந்து, நார்வே, ஜெர்மனி, பிரான்சு இந்த ஐந்து தேசங்களைக் காணமுடிந்தது, பஸ் நல்ல வேகம்; புத்தம் புதிது; குறைபாடற்றது. விமானத்தில் செல்வது போன்ற சுகம் தருகிறது. அது தரையில் இயங்குகிறதா விமானத்தில் பறக்கிறதா அதிகம் வேறுபாடு இல்லை. காரணம் சாலைகள் அவ்வளவு ஒழுங்காகச் சுத்தமாக செம்மையாக அழகாக அகலமாக எந்தவித அதிர்ச்சியும் தராமல் எதிரே வண்டி. வரும் என்ற அச்சமில்லாமல் இருப்பதால்தான்.

இங்கிலாந்தில் ‘டோவர்’ துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்பட்டோம், பெல்ஜியத்தையும் இங்கிலாந்தையும்