பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

உங்களுக்குத் தெரியும் பிரான்சு நாட்டிலிருந்து வந்த அழகி ஒருத்தி இராமேஸ்வரம் அருகில் ஒரு ஒதுக்குப்புற கிராமத்தில் தொழுநோய் உடைய எளிய குடும்பத்து கிருஷ்ணனை மனமார விரும்பி அவனைக் கணவனாக ஏற்று இந்திய முறைப்படி வாழ்க்கை நடத்துவதில் ஒரு தனித்துவத்தைக் காட்டுகிறாள்.

அந்த நோயைப் பற்றி அவள் பொருட்படுத்தியதே இல்லை. பிரான்சு நாட்டில் பிறந்தவள்; அழகு போதையில் மயங்குபவள்; சுக லயத்தை பிரேமிப்பவள்; இப்படி ஒரு பட்டிக்காட்டுப் பெண்ணாக இந்தியக் குடும்பத்தில் ஐக்கியப்பட்டு வாழ்க்கைப்படுகிறாள்! அவள் இந்தியப் பெண் ஆனாள்.

பாரிஸ் நகரம் உண்மையில் அழகின் இருப்பிடம்தான்; பெண்களை வைத்து மட்டும் நான் முடிவு செய்யவில்லை; அழகும் கவர்ச்சியும் மிக்கவர்கள் அங்கு மிகுதியாக இருக்கிறார்கள். அவர்கள் அனுபவிக்கப் பிறந்தவர்கள் ரசனை மிக்கவர்கள்; நடனக் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள். அந்த நகரம் மிக அழகான நகரம்; அழகாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு, புல்லும், மரமும், பளிங்கும், நீர் உவற்றும் கட்டிடங்களைக் கட்டிக் காக்கத் தாஜ் மகால் கட்டிட நினைவுகளைத் தோற்றுவிக்கும் வனப்பினை அந்த வீடுகள் தந்துகொண்டிருக்கின்றன. தெருக்களில் வளைவுகள் இல்லை; நேர்மை இருந்தது.

ஒரு நகரம் நெருக்கடியும் சுருசுருப்பும் வேகமும் உடையது என்றால் அதற்கு மெருகு ஊட்டுவது பிக்பாக்கட்டுகள்தாம். பெரிய நகரங்களுக்கே பெருமை இப்படி புத்திசாலித்தனமான திருட்டுத் தொழில் நடத்துபவர்களைப் பெற்றிருப்பதால்தான். முன்பெல்லாம் இந்தப் புகழ் சென்னை மூர் மார்க்கட்டுக்கு உண்டு; பம்பாய் நகரும்