54
நம்மவர்கள் மட்டும் குடித்துவிட்டதும் ஏன் நம் நிலை மறக்கிறார்கள் என்று எண்ணுவது உண்டு. இவர்கள் கவிஞர்கள்; கவிதைகள் பிறக்கின்றன; அவ்வளவுதான், அங்கேயும் இப்படிப் பிதற்றாவிட்டாலும் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து அதிர்ச்சியை உண்டாக்கிய ஒருவரை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. கேட்டால் “அவர் அப்படித்தான்; சாதாரண சுயநினைவில் அவரைப் பார்க்கவே முடியாது” என்று தெரிவித்தார்கள்.
எங்களோடு பேருந்தில் வந்த பயணிகளில் ஒருவர் அமெரிக்க நாட்டுக் கவிஞர் என்று நினைக்கிறேன் அல்லது கவிதை ரசிகராக இருக்கவேண்டும். நம் நாட்டில் புதுக் கவிதை வந்த பிறகு விதவிதமான புதுமையான சுவை மிக்க கவிதைகளைப் பாடிக் கவிதைக்கு ரசனையை ஏற்படுத்திவருகிறார்கள். இடைக்காலத்தில் ‘காளமேகம்’ ஒருவர் தான் இரண்டு பொருள்படக் கவிதை எழுதி நகைச்சுவை தோற்றுவித்தவர்.
“எட்டேகால் லட்சணமே எமனேறும் வாகனமே” என்ற வரிகள் “அவலட்சணமே எருமைக்கடாவே” என்ற மற்றொரு பொருளையும் தருகிறது.
இப்பொழுது புதுக்கவிதைகள் சுவை தருவனவாக அமைகின்றன.
“வீட்டுக்கு விளக்கேற்ற மருமகள் தேவை” என்கிறாள் மாமியார். ‘அதை அணைக்கவும் அவள் தேவைப்படுகிறாள் என்கிறான் மகன்’ என்ற கருத்துப் படப் புதுக் கவிதை தெரிவிக்கிறது.
‘ஆடை வாங்க அவள் நிர்வாணத்தை விலைக்கு விற்கிறாள்” என்கிறது புதுக் கவிதை.
“எம்ப்ளாய்மெண்டு எக்சேஞ்சிக்கு மகன் போகிறான் தன் அட்டையைப் புதுப்பித்துக்கொள்ள. அப்பனும்