பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சரியாக விளங்கவில்லை. நமக்கு என்று ஓர் வரலாறு உண்டு; சாதனையும் உண்டு; அது இந்தத் திருக்கோயில் கட்டிடங்கள், சிற்பங்கள்; அவை சரிந்துகொண்டே போகின்றன.

சில சமயம் அவை புறவளர்ச்சி முயற்சிகளுக்குத் தடையாக இருப்பதால் புறக்கணிக்கவும் படுகின்றன. பல கோயில்கள் வழிபடுவோர் குறைந்து வருவதால் பாழ் பட்டும் வருகின்றன. பல பெரிய கோயில்கள் புதுப்பிக்கப் பட்டும் வருகின்றன. வேங்கடவன் திருக்கோயில், திருவரங்கத்து மதிற் கோயில், மதுரை மீனாட்சிக் கோயில், முருகன் மலை முதிர்ச் சோலைகள் எல்லாம் வெளிநாட்டு இந்தியர்கள் தம் நாட்டுக் கலைத் தெய்வங்களாகப் போற்றி வருகின்றனர். அமெரிக்காவில் வேங்கடவன் கோயில் எழுப்பி உள்ளனர். இங்கிலாந்திலும் தங்கள் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்க வேங்கடவன் திருக்கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறது. எங்கு இருந்தாலும் நம்மவர்கள் நம் நாட்டுக் கலாச்சாரத்தை மறக்காமல் காப்பாற்றி வருகிறார்கள். புற மாற்றங்கள் பாதிக்கின்றன. மனோபாவங்கள் வாழ்வு முறைகள் நடைமுறைகள் மன இயல்புகள் மாறாமல் அங்கு வாழும் இந்தியர்கள் இந்தியர்களாகவே இருக்கின்றனர். சாதிகளை மீறுகிறார்கள்; கலப்பு மணத்தைத் துணிந்து ஏற்கிறார்கள்; என்றாலும் ‘இந்தியர்கள்’ என்ற வரையரையை மீற விரும்புவதில்லை; மண வாழ்வில் சாதி மீறல்கள் துணிந்து ஏற்கப்படுகின்றன. இவை வெளி நாட்டின் வாழ்வியல் தாக்கம்; அதே சாதியில் அங்கே எப்படிப் பெண்களைத் தேடமுடியும்? அதனால் இந்த விரிவு மனப்பான்மை அவசியத்தால் ஏற்பட்ட ஒன்று என்றுதான் கூறமுடியும். சாதிக்குள்ளேயே மணக்கலப்பு முயல்கிறார்கள்; முடிவதில்லை, அதனால் இந்த அளவுக்கு மனப்பாங்கு பெற்று ‘இந்துக்கள்’ என்ற வரையறைக்குள் கலப்பு மணத்தைச் செய்துகொள்கிறார்கள். சீக்கியர்கள் இங்கிலாந்தில் லண்டனில் ‘செளத்ஹால்’ என்ற பகுதியில்