59
மிகுதியாகத் தங்கிக் கடைகளில் வியாபாரம் செய்து வரு கின்றனர். அவர்கள் தனி இனமாக ஒற்றுமையோடு இனப் பற்றோடு இயங்கி வருகிறார்கள்.
தனிப் பண்பாடு
‘பூவே நீ பூச்சூடவா’ இதுவும் நம் தமிழ் நாட்டுக் கலாச்சாரம். பூவையரைப் பூங்கொடிகள் என அழைப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். கொடிகள் போன்று தவழும் இடையும் மென்மையும் நம் மகளிரிடம் எதிர் பார்க்கப்படுகின்றன; கரிய கூந்தலில் பூக்களைத் தாங்கி முடிப்பது அவர்களின் தனியழகு; கோயில்களுக்குச் செல்லும் நம் பாவையர் பட்டு உடுத்தி நெற்றியில் சிவப்பு இட்டுத் தலையில் பூச்சூடிச் செல்வதும் மறக்க முடியாத காட்சிகள். நம்மலர் தலையில் பூச்சூடிச் செல்லும்போது அவர்கள் அதை வியப்பாகப் பார்க்கின்றனர். பார்க்கட்டுமே; நமக்கு என்று சில அழகுகள் போற்றப்படுகின்றன, அவர்கள் இதழுக்குச் சிவப்பு ஊட்டுகின்றனர். நம்மவர்கள் நெற்றிக்குச் சிவப்பு தீட்டுகின்றனர். நிறங்கள் வேண்டும்; அந்த நிறத்தை நம்மவர் தலையில் பூக்களில் காட்டுகின்றனர். மணமும் ஊட்டுகின்றனர். செண்டுகள் அவர்களுக்குத் தரும் மணத்தை நம் மல்லிகைப்பூக்கள் கூந்தலுக்குத் தருகின்றன.
இதைப் பற்றிய ஒரு பிரச்சனையே சங்கப் பாடல் ஒன்று எழுப்பியிருக்கிறது. அதை ஒட்டித் திருவிளையாடற் புராணத்திலும் ஒரு வாதம் நடக்கிறது.
இறைவனே நக்கீரரைப் பார்த்துக் கேட்கின்றார்:
‘பார்வதிக்குக் கூந்தலில் மணம் இயற்கையா செயற்கையா?’ அவருக்கே ஒரு மயக்கம்.
“பழம்பாட்டின் கருத்து இது : தலைவியின் கூந்தலின் மணத்தை வண்டே நீ கண்டு இருக்கிறாய். நீ பல பூக்களை