பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

நாடி அதன் மனத்தை நுகர்ந்து இருக்கிருய். அந்த மணத்தோடு இதனை ஒப்பிட்டுச் சொல்; இந்த நறுமணத்தைவிட அது சிறந்ததா?” என்று தலைவன் ஒருவன் கேட்கிறான்.

அது அவன் கவிதையில் தோன்றும் நயம். அதை ஒட்டியே இந்த வாதம் எழும்பி உள்ளது.

இப்படி எந்தத் தலைவனும் ஆங்கிலப் பெண்ணின் வெட்டிய கூந்தலை வைத்துக் கவிதை புனைய முடியாது. அவள் கூந்தலும் சித்திரிக்கப்பட்ட கூந்தல்தான்; அதில் பலவகை நிறங்கள் தீட்டப்படுகின்றன. வாரி முடிக்கத் தேவை இல்லை; வாரிவிட அவை அமைந்துள்ளன. சுருள்கள் அக்கூந்தலுக்குத் தனியழகு தருகின்றன. ஏதோ இந்த நினைவு எழுந்தது; எழுதிவிட்டேன். தொடர்பு இல்லையே என்று எண்ணவேண்டாம்; நான் திட்டமிட்டுக் குறிப்பு வைத்துக்கொண்டு இதை எழுதவில்லை என்பதற்கு இது ஒரு அடையாளம்.

பாரிசில் ஒரு நடனம்

பாரிஸ் நகரத்தில் பார்த்த ஒன்று; அதையும் சொல்லி விடுகிறேன்; டூரிஸ்டுப் பேருந்தினர் விருப்பம் உள்ளவர் ‘காபரே நடனம்’ சென்று பார்க்கலாம் என்று அறிவித்தனர். அதைப் பார்க்கப் பன்னிரண்டு பவுண்டு கட்டணம் என்று நினைக்கிறேன். அதாவது இருநூறு ரூபாய் அளவு என்று கணக்கிடுகிறேன். இவ்வளவு தூரம் போய் அதைப் பார்க்காமல் வருவது எப்படி, பணம் பிறகு சம்பாதித்துக் கொள்ளலாம்; அதை எப்படி மறுபடியும் பார்க்க முடியும். இப்படிச் சொல்லி நம்மை நாம் சில சமயங்களில் சமாதானம் செய்துகொள்கிருேம்.

‘காபரே நடனம்’ பாரிஸ் நகரத்துப் பாரம்பரியக் கலை. அதில் பாரிஸ் நகரத்து அழகிகள் மட்டும் அல்ல; உலகத்-