63
விளம்பரத்துக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதை மேலும் விமரிசிக்க விரும்பவில்லை. அது பாரிஸ் நகரத்து இரவு; அவ்வளவுதான் விளக்கம். அவள் ஒரு அடையாளம்; வகைகள் உள்ளே விலைப்பொருளாக உள்ளன.
மறந்துவிட்டேன்; அந்த நடனத்தில் இடையிடையே நகைச்சுவை நிகழ்ச்சிகள் புகுத்தப்பட்டன. நகைச்சுவை என்று கூறும்போது நம் தமிழ் நடிகை மனோரமாவின் நடிப்பு நினைவுக்கு வருகிறது. சோவின் நடிப்பிலும் மாற்றத்தைக் காணமுடிகிறது. தொலைக்காட்சியில் அவர்கள் நடித்த நாடகங்கள் தனித்தனியே பட்டு மாமியாக குழந்தைக்காக ஏங்கும் தாயாக மனோரமா நடிக்கிறார். கொஞ்சங்கூட நகைச்சுவை இல்லாமல் தத்ரூபமாக மனத்தைத் தொடக்கூடிய வகையில் சோகக் குமுறல்கள் ததும்ப நடித்துக்காட்டுகிறார். அதேபோல சோ ‘பெருமாள் பக்தராக’ நடிக்கிறார்; சாதிக் கட்டுப்பாடு தேவையற்றது என்ற கருத்தைப் புகுத்தும் நாடகம் அது; அவர் நகைச்சுவைக்கு இடமே தராமல் நடிப்பு எல்லையைத் தொட்டுக் காட்டுகிறார். நகைச்சுவை நடிகர்கள் சீரியஸ் ரோல் எடுத்து நடித்துக் காட்ட முடியும் என்பதை அவர்கள் தொலைக் காட்சி நாடகங்களில் காட்டிவிட்டார்கள்.
அந்த நடனத்தில் சிறிது மாற்றம் விளைவிக்கக் கோமாளிக் கிண்டல் நாடகம் ஒன்று நடிக்கப்பட்டது. அந்த அரங்கு அதில் முன்னால் உட்கார்ந்திருக்கும் பார்வையாளர்கள் பல தேசத்துப் பயணிகள். அந்தத் தமாஷ் பல தேசத்து ரசிகர்களைக் கவரத்தக்கதாக இருந்தது.
ஒருவன் வழி தவறிப் பத்து பவுண்டு நோட்டுக் கீழே போட்டுவிடுகிறான். அதை யாரும் கவனிக்கவில்லை; ஆங்கிலேயன் ஒருவன் அதை எடுக்கிறான்; எடுப்பதற்கு முன்னால் பல முறை யோசித்துப் பின் எடுக்கிறான். என்று நினைக்கிறேன். மறந்துவிட்டது. ருஷிய நாட்டவன்