பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

அபாயம் தவிர்க்க வேண்டிய சூழ்நிலையில் மட்டும் ஒலி பெருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

மற்றொன்று காரில் முன் சீட்டில் உட்கார்ந்திருப்பவர் விமானத்தில் செல்வது போல் இடுப்பைச் சுற்றி பில்டுகள் கட்டிக்கொள்ள வேண்டும். குழந்தைகளை எந்தக் காரணைத்தைக் கொண்டும் முன் சீட்டில் உட்காரவைக்கக் கூடாது. டாக்சி ஓட்டிகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அவர்களுக்கு பில்டுகள் தேவை இல்லை.

இரவில் நீண்ட வழிகளைக் கார்கள் கடந்து செல்கின்றன, வழியில் யாராவது மடக்குவார்களே என்ற அச்சமே இல்லை; அதைப்போன்ற நிகழ்ச்சிகள் நடப்பதே இல்லை.

வழியில் வண்டி. பழுது ஆகிவிட்டால் என்ன செய்வது? வழிப்பாதையில் ஆங்காங்கே இடைவெளி விட்டுத் தொலைபேசிக் கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அங்கிருந்து கார் பழுதுபார்க்கும் கம்பெனிக்கு போன் செய்தால் அவர்கள் வந்து பழுது பார்த்துச் சரி செய்து உதவுகிறார்கள். இவர்களை அவர்கள் கார்களில் ஏற்றி அனுப்பி விட்டு நிதானமாக வண்டியைப் பழுது பார்த்துப் பின் அவர்களிடம் சேர்ப்பிக்கிறார்கள். அதற்கு என்று ஒரு கட்டணம் செலுத்தி அந்த நிறுவனங்களில் உறுப்பினர் ஆதல் வேண்டும். அதனால் வழியில் கார் கெட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயமே அவர்களுக்கு உண்டாவது இல்லை. வழி நெடுக ஒளி விளக்குகள் வழி காட்டுகின்றன. *எந்த நேரத்திலும் கூப்பிட்ட குரலுக்குப் போலீசு உதவி வந்து சேர்ந்துவிடும்.

பெட்ரோல் பங்குகளில் இங்கு அதன் ஊழியர்கள் வந்து பெட்ரோல் போட்டு உதவுகிறார்கள். அந்த நிலை அங்கு இல்லை. அவர்களே அந்தக் குழாயைக் காரில்