74
பொருத்தித் தேவையான அளவிற்குப் போட்டுக்கொள்கிறார்கள். கடைக்காரர் உள்ளிருந்தே கணக்குத் தெரிந்து கொள்ளக் கருவிகள் இருக்கின்றன, இருந்த இடத்தில் இருந்தே ‘பில்’ தொகை பெற்றுக்கொள்கிறார்கள்.
கார்கள் கழுவப்பட வேண்டுமானால் அதற்கு உரிய இடத்தில் நின்றால் போதும். நாம் உள்ளேயே இருக்கலாம். அங்கு உள்ள குழாய்கள் நீரை வாரி இறைத்துச் சுத்தம் செய்து விடுகின்றன. இது ஒரு வசதி; பெட்ரோல் பங்குகள் சிலவற்றில் இருக்கின்றன.
கார்களுக்கு டயர்களுக்கு அடிக்கடி காற்று அடிப்பதே. இல்லை, நல்ல வலுவான டயர்கள்; ஒழுங்கான சாலைகள்; டயர்கள் தேய்வதும் இல்லை; காற்று இறங்குவதும் இல்லை.
டிக்கட்டு இல்லாமல் பயணம்
ரயில்களில் டிக்கட்டு வாங்காவிட்டாலும் பயணம் செய்யலாம்; அதற்காக அவர்கள் இரட்டிப்புக் கட்டணம் கேட்பது இல்லை; இறங்கும் இடத்தில் டிக்கட் வாங்காதவர்கள் செல்வதற்குத் தனி வழி வைத்து இருக்கிறார்கள்; அங்கே அவர்களிடம் சொல்லிவிட்டு உரிய கட்டணத்தையும் செலுத்திவிடலாம். நாம் எங்கிருந்து பயணம் தொடங்கினோம் என்பதை நாம் சொல்ல அவர்கள் நம்புகிறார்கள்.
எப்படி இந்த வளர்ச்சி ?
இப்படி, ஒரு கேள்வி எழத்தான் செய்கிறது. அவர்கள் நம்மை அடிமைப்படுத்தி நம் செல்வம் எல்லாம் கொள்ளை கொண்டு போனார்கள் என்பது வரலாற்று உண்மை, அதைப் பற்றி இப்பொழுது விமரிசித்துப் பயன் இல்லை, நம் நாட்டுக் ‘கோகினூர் வைரம்', இன்னும் அவர்கள் விலை