பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

யுயர்ந்த மணிகளையும் பொன் முடிகளையும் இன்னும் அரிய பொருள்களையும் வைத்துக் காட்சிப் பொருளாக வைத்துள்ளனர். ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவந்த வைரக்கற்கள் மிகுதி. இன்று அவற்றை அரசியின் உடைமைகளாக ஆக்கிக்கொள்ளாமல் காட்சிப் பொருளாக நாட்டு உடைமையாகப் பாதுகாப்பது பாராட்டத் தக்கதாகும்.

உலக நாடுகள் பலவற்றைத் தம் ஆட்சியின் கீழ் வைத்து ஆண்டதும் அந்தக் காலத்திலேயே அவர்கள் வாணிபத் தொழிலில் வளர்ச்சி பெற்றிருந்தனர். அவர்கள் தொடர்பால்தான் நம் நாட்டில் ரயில் அமைப்புகள், விமானம் இன்னும் பல வசதிகள் ஏற்பட்டதை மறுக்க முடியாது; ஒரு நாடு அதன் இயற்கை வளத்தால் முன்னேறுகிறது என்று மட்டும் இன்று கூறமுடியாது. அவர்கள் அறிவு வளர்ச்சி, ஆற்றல், கல்வி, எடுத்து நடத்தும் திட்டங்கள் இவற்றையும் பொறுத்து உள்ளது. அண்டை அயல் நாடுகளால் போர்த் தாக்குதல்கள் நிகழும் என்ற அச்சம் இருப்பதால் நம் நாட்டுத் தொழில் வளர்ச்சி, செல்வம் போர்க் கருவிகளுக்கும் படை வன்மைக்கும் பயன் படுத்தப்படுகின்றன, வளரும் நாடுகள் வேகமாக வளர முடியாததற்கு இந்தப் போர் அச்சம் முக்கிய காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்தப் போர் அச்சம் அந்த நாடுகளிலும் உள்ளன. நேர்த் தாக்குதல் வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஜெர்மனி யுத்தம் அவர்கள் மனத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது. மறுபடியும் ஒரு ‘ஹிரோஷிமா’ நிகழக்கூடாது என்ற உணர்வு ஐரோப்பா முழுவதும் உள்ளது. அணுகுண்டால் உண்டாகும் அழிவுகளை ஒரு திரைப்படம் சித்திரித்துக் காட்டுகிறது. அதை ஒரு வீடியோவில் பார்க்க முடிந்தது. நல்ல வளமான வாழ்க்கை