உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

எப்படித் தீய்ந்து போகிறது என்பதைக் காட்டுகிறது அந்தப் படம்; வாழும் மண்; அதில் உள்ள மக்கள் கொடுமையான நோய்களுக்கு இரையாகி உருத்திரிந்து அழிகிறார்கள். ஜீவன்கள் உற்பத்தி ஆகமுடியாத ஒரு பேரழிவு; குழந்தைகள் குறைபாடு உடையனவாகப் பிறக்கின்றன. இப்படி ஒரு படத்தைப் பார்க்கும்போது அவர்கள் அங்கு நிம்மதியாக இல்லை என்பதை உணர முடிகிறது. எல்லா வளனும் இருந்தும், வாழ்க்கையில் உறுதிப்பாடு இருந்தும், இயற்கை வளம் நிறைந்தும், தொழில் பெருக்கம் இருந்தும் நம்பிக்கையான ஆட்சியியல்கள் செயல்பட்டும் மொத்தமாக இந்த மனித இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அந்த நாடுகளில் இருக்கிறது. அவ்வப் பொழுது அணுகுண்டு எதிர்ப்பு இயக்கங்கள் ஐரோப்பாவில் தோன்றிக் குரல் கொடுக்கின்றனர். அமெரிக்காவிலும் இந்த இயக்கம் எழுந்து குரல் கொடுக்கப்படுகிறது. பாரத நாட்டில் நமக்குப் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் இதைப்பற்றி அதிகம் கவலைப்படாமல் இருக்கிறோம். என்றாலும் பாரதப் பிரதமர் அண்மையில் இதை எடுத்துச் சொல்ல அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் பயணம் செய்ததை நம்மால் மறக்க முடியாது. உலக அரசியல் கண்ணோட்டம் உடைய ஒவ்வொருவருக்கும் உலகம் அழியாமல் இருக்கவேண்டும்; அணு ஆயுதம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்; அறிவு அற்றம் காக்கும் கருவி என்பதற்கு இலக்காக மானிடம் செயல்பட வேண்டும் என்ற விழிப்பு உலகு எங்கணும் நிலவுகிறது; நிபந்தனைகள், பேச்சுகள், திட்டங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், ஆக்கபூர்வ முயற்சிகள் உலகப் பேரரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

நாம் அந்த தேசங்களின் போக்குகளையும் சிந்தனைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் வாழ்வியல் முறைகளையும் நோக்கங்களையும் அறியும் போது குறைவு நிறைவுகள் தெரிந்துகொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன,