பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அடிமையாக்கினார்கள்; நம் செல்வம் கொள்ளை கொண்டு போகப்பட்டது. இங்கே விளையும் பருத்தி அங்கே சென்று ஆடைகளாக மாறி விற்பனை செய்யப்பட்டது; இங்கிருந்து அரசியல் ஆதிக்கத்தால் சுரண்டப்பட்டு வறுமை மிஞ்சி விடுதலை கெட்டு உண்ண உணவும், உடுக்க உடையும் இருக்க வீடும் இன்றி வறுமைக் கோட்டில் அவர்கள் நம்மை வாழவைத்ததாகக் குற்றச்சாட்டு.

அந்த வறுமை வாழ்விற்கு அவர்கள்தான் காரணம் என்றால் நம்மை நாம் ஆளும் இந்தச் சுதந்திர ஆட்சியில் நிலைமைகள் மாறி இருக்க வேண்டும், சுதந்திரம், ஜனநாயகம், சோஷியலிசம் என்ற இந்த மூன்று தத்துவங் ளில் இந்திய அரசியல் பரிணமித்தது. இது உலக நாடுகளின் முற்போக்குக் கொள்கைகளில் அடிப்படையானது. நாம் அன்றைய நிலையில் இருந்து பெரிய மாற்றத்தை உண்டாக்கித்தான் இருக்கிறோம். எப்படி? விவசாய நாடாக இருந்த இந்தப் பாரத தேசம் தொழில் வளர்ச்சி பெறும் நாடாக மாறி வருகிறது. வசதிகளைப் பெருக்கி வாழ வகை செய்துகொண்டு வருகிறோம்.

இத்தனை வளர்ச்சிகளுக்குமிடையே அவர்களோடு போட்டியிட்டுச் சரிசமமான நிலையை அடைந்தோமா அடைய முடிந்ததா அடைய முடியுமா என்ற கேள்விதான் எழுகிறது. அணுகுண்டு வீச்சால் அழிவுற்ற நாடுகளும் இன்று தொழில் வளத்தால் மிக வேகமாக முன்னேறியுள்ளன. ஜப்பான் இன்று உலக நாடுகளில் தொழில் வளம் மிக்க நாடாக விளங்குகிறது. மொத்தமாகச் சொன்னால் அந்த தேசங்கள் வளர்ச்சிபெற்ற நாடுகள் (developed countries) என்றும், நம் நாடு வளர்ச்சி பெறும் நாடு (developing country) என்றும் பேசப்படுகின்றன.

அவர்கள் திரை கடலோடியும் திரவியம் தேடினார்கள்; வணிகத்தில் தொழில் வளர்ச்சியில் இயந்திர சாதனத்தில் முன்னேறிவிட்டார்கள்; பெரிய நகரங்கள் படைத்துவிட்