81
இந்த நிலைமை அங்கு இல்லை. அவர்கள் அந்தஸ்துக்காக அணிவது இல்லை; அழகுக்காக ஒன்று இரண்டு போட்டுக்கொள்கிறார்கள். கழுத்தில் செயினாக இருக்கலாம்; கையில் மோதிரமாக ஒளி தரலாம்; அவ்வளவுதான். அது அவர்கள் கலாச்சாரம். அவர்கள் பெண்மையிலிருந்து விடுபட முயல்கிறார்கள்; ஆண்களோடு போட்டியிடுச் சரிசமமாக வாழ முயலும் முயற்சியில் பெண்மைக்கே. உரிய தனித்துவங்களை அவர்கள் வளர்த்துக்கொள்வது இல்லை. ‘ஆண்களோடு பெண்களும் சரிநிகர்ச் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே’ என்று பாரதி குரல் கொடுத்தான். பிற நாட்டில் வாழ்கிறார்கள் அதுபோல நாமும் இந்த நாட்டில் வாழ்வோம் என்று குரல் கொடுத்தான். அப்படிச் சொல்லிவிட்டுப் பெண்கள் நிறை. நகைகளைப் போட்டுக்கொள்வதில் அர்த்தமே இல்லை; பொன் விலங்குகளைத் தகர்த்து மேல் நாட்டுப் பாணியில் உடை உடுத்தும் போக்கு இப்பொழுது இங்கும் வளர்ந்து வருகிறது. தனிச் சலுகைகளைத் தவிர்ப்பது தக்கது என்று உணர்கின்றனர், என்றாலும் இந்தச் சூழ்நிலை அவர்களை மாற்றிக்கொள்ள இடம் தருவதில்லை; வாய்ப்பு இல்லாததால் அவற்றைக். குறைத்துக்கொண்டு வாழும் வகை இப்பொழுது வளர்ந்து. வருகிறது.
பாலியல் பார்வை
“என்னுடைய பெண் இவள்; இப்பொழுதுதான் வயசுக்கு வந்தாள்” என்று ஒரு ஆள் நம் ஊரில் என்னிடம் அறிமுகம் செய்கிறான். இது என்ன அவ்வளவு முக்கியமான செய்தியா? ‘பூப்பெய்தினாள்’ என்ற செய்தி மங்கல விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சில சமயம் விளம்பரமும் தரப்படுகிறது. இது எதைக் காட்டுகிறது?
பெண்ணை நாம் பார்க்கும் பார்வையே இந்த அடிப்படையில்தான் என்பதை மறுக்க முடியாது. இந்தப்