82
பாலியல் பார்வை தேவைதானா? அதைக் கடந்து போக முடியுமா? பெண் ஆண்களோடு சம உரிமைகள் பெற்று வாழ முடியுமா? அப்படி வாழும் நாடு அந்த தேசம். ஐரோப்பா. அமெரிக்கா, ஏன் ஆங்கிலம் பேசும் உலக நாடுகள், ருஷியா, சப்பான் எல்லாம் பெண்கள் ஆண்களைப் போலத் தொழில் செய்ய முன்வந்துவிட்டார்கள்.
குழந்தை பெறுவது ஒன்றுதான் பெண்கள் செய்யக் கூடிய தனித் தொழில்; அதேபோல் அதற்குக் காரணமாக விளங்குவது ஆணின் தனி நிலை. இவ்விரண்டைத் தவிர்த்து ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவரும் இன்று அங்கு எல்லாத் தொழில்களிலும் பங்கு பெற்றுள்ளனர். ஏதோ பாலியல் நோக்கு உள்ளபோது அவள் அந்தப் பார்வையில் பார்க்கப்படுகிறாள்; மற்றைய சூழ்நிலைகளில் அவளும் ஆண்களைப் போலவே மதிக்கப்படுகிறாள்.
கடமைகள்
கடமைகளும் பொறுப்புகளும் நாட்டுக்கு நாடு வேறு படுகின்றன. அது அந்தந்த நாட்டு ஆட்சியின் பொறுப்புகளை ஒட்டியதும் ஆகும். பழங்காலத்துப் புறநானூற்றுப் பாடல் கடமைகளை விளக்கிக் கூறுகிறது.
“ஈன்று புறந்தருதல் என் தலைக் கடன்
நன்னடை நல்கல் தந்தைக்குக் கடன்
சான்றோன் ஆக்குதல் வேந்தற்குக் கடன்”
என்கிறாள் தமிழ்ப் பெண்.
மகனைப் பெறுவது தாயின் கடமை; பெறுவது மட்டுமல்ல; அவனை வளர்ப்பதும் அவள் பொறுப்பாகிறது. அதனால் அவள் ‘ஈன்று’ என்று மட்டும் கூறாமல் ‘புறந்தரு