உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

தல்’ என்றும் கூறுகிறாள்; அவனை மற்றவர்கள் மதிக்கத்தக்க நிலையில் வளர்ப்பது தாயின் கடமையும் பொறுப்பும் ஆகிறது; அவனுக்கு நல்ல ஒழுக்கங்களைக் கற்பிப்பது, பழக்குவது, தந்தையின் கடமை. அவனை வாழத் தகுதியுடைய சான்றோன் (எல்லாவகையிலும் நிறைவு உடையவன்) பொதுக் கல்வி, தொழிற் கல்விப் பயிற்சி இவற்றைத் தந்து குடிமகன் ஆக்குதல் ஆட்சியின் கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடல் தெளிவாக அறிவுறுத்துகிறது.

இந்த மூன்றாவது பொறுப்பையும் பெற்றோர்கள் ஏற்க வேண்டிய சூழ்நிலை இங்கு உள்ளது. பையனைப் படிக்க வைத்துத் தொழில் தேடி. எல்லாவகையிலும் அவனை உருவாக்குதல் தந்தையின் பொறுப்பாகிறது; பெண்ணுக்கும் இதே போலப் படிக்கவைத்துக் காப்பாற்றித் தக்க பொருளும் தந்து அவள் வாழ்வுக்குத் தேவையானவற்றைத் தந்துகொண்டே இருப்பது பெற்றோரின் கடமையாகிறது.

இந்த மூன்றாவது நிலையில் அவர்கள் தேசம் நம்மிலிருந்து மாறுபடுகிறது. பையனுக்குக் கல்வி தொழில் இவற்றை அவனே தேர்ந்து எடுத்துக் கொள்கிறான் ; அங்கேயும் நம் நாட்டைப் போல அரசு பொதுப் பள்ளிகள் இருக்கின்றன, வசதி உடையவர்கள் தனியார் பள்ளிக்கே அனுப்புகின்றனர். அங்கு வாழும் நம் நாட்டவர் தனியார் பள்ளிகளுக்கே தம் பிள்ளைகளை அனுப்புகின்றனர். கல்வியின் தரம் மட்டுமல்ல; வசதியுள்ள குடும்பங்கள் வந்து படிப்பதால் உயர் குடும்பப் பிள்ளைகளின் தொடர்பு ஏற்படுகிறது, அதனால் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை. அதே நிலைதான் நம் நாட்டிலும் ஏற்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் பிள்ளைகளின் பொதுத் தேவைகளுக்குப் பணிபுரிகின்றன; தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தை மையமாக வைத்து மேல் நிலைக் குடும்பங்களின் தேவைகளுக்குப் பயன்படுகின்ற’.