பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

அமெரிக்க நிறுவனங்கள் நடத்தும் சிற்றுணவு அகங்களில் பள்ளிப் படிப்பு முடித்த நிலையில் இளம் பெண்கள் அங்குப் பரிமாறும் பணி, பண்டங்களை எடுத்துத் தரும் பணி ஏற்று நடத்துகின்றனர், இவர்கள் விடுமுறைகளில் ஒய்வு நேரங்களில் இதைப் போலச் சிறு தொழில்களை ஏற்றுப் பணம் சேர்த்துக் கொண்டு கல்லூரிப் படிப்புக்குத் தயார் செய்து கொள்கின்றனர் என்பதைக் கேட்டு அறிய முடிந்தது. பெற்றோர்களின் பொருளாதாரத்தில் தம் எதிர்காலங்களை அந்த நாட்டுப் பிள்ளைகள் நம்பி வாழ்வதில்லை. சுய முயற்சியும் தன் நம்பிக்கையும் கொண்டு வாழ்கின்றனர்.

‘சான்றோன் ஆக்குதல் வேந்தற்குக் கடன்’ என்ற கோட்பாடு அங்கே நிலவுகிறது. நாடு அவர்களுக்குத் தக்க வாய்ப்புகள் தருகின்றன.

தேறாத ‘கேசுகளும்’ அங்கும் உள்ளன. பொதுவாக அங்குத் தம்மைத் தாம் வளர்த்துக் கொள்ளும் சூழ்நிலைகள் உள்ளன என்று கூற முடியுமேயன்றிப் பிள்ளைகள் எல்லாம் தெளிவாக வாழ்கின்றனர்; தம்மைத் தாம் தகுதியாக்கிக் கொள்கின்றனர் என்றும் கூற முடியாது. வேலை வெட்டியற்றுத் தேறாத ‘கேசுகளும்’ உள்ளன. கடை வீதிகளில் சுறுசுறுப்பான இடங்களில் அங்காடிகள் கட்டிடங்களில் சோம்பித் திரிந்து வன்முறைகளில் ஈடுபடுபவர்களும் உண்டு. அவர்களைப் பிரித்து அறியத்தக்க வகையில் சில போக்குகளையும் காணமுடிகிறது. திருப்பதிக்குப் போகாமலேயே மொட்டையடித்துக் கொள்ளும் பக்தர்களாகக் காட்சி அளிக்கின்றனர். ஒரு சிலர் நம் நாட்டுக் கோயில் குடுமிகளைப் போல உச்சிக் குடுமி வைத்தும் இருக்தின்றனர். சிலர் மயிர்முடி சிவப்பேறிச் சேவற் கொண்டைகளைப் போல ஒரு பக்கம் சாய்த்துவிட்டு அவர்கள் தனித்தன்மையைக் காட்டி வெளிப்படுத்துகின்றனர். சமயம்