பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

டார்கள்; வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வாழ்வது எப்படி என்று அறிந்து வாழ்கிறார்கள். இங்கே வாழ்வதே சரியல்ல; அது ஒரு மாயம்; மயக்கம் என்ற சித்தாந்தங்களுக்கு ஊடே ஒளி காண வேண்டியுள்ளது. விதியையும். மூட நம்பிக்கைகள் பலவற்றையும் கொண்டு வாழ்வில் ஒவ்வொரு அடியும் எடுத்து வைக்கும் பழக்கம் ஆகிவிட்டது. அங்கே கண்ட உயர்ந்த கட்டிடங்களையும் வியத்தகு சாதனைகளையும் எழுதிக் காட்டுவதை விட வாழ்க்கையின் அடிப்படைகளை மட்டும் எழுதுவதுதான் தக்கது என்ற அடிப்படையில் இந்த எழுத்து இயங்குகிறது.

அந்தப் புற மாற்றங்களை அடைய நாம் இன்னும் எவ்வளவோ காலம் உழைக்கவேண்டியுள்ளது. நம்முடைய போராட்டங்கள் பெரும்பாலும் உள் மனப் போராட்டங்களாக அமைகின்றன. அவர்கள் போராட்டங்கள் புறநிலைப் போராட்டங்கள். உற்பத்தி சாதனைகளைப் பெருக்கி அவற்றை மக்களுக்குப் பயன்படுத்தி மனிதன் வாழ்வதற்கு வேண்டிய தேவைகளையும் வசதிகளையும் பெருக்கிக்கொள்வதில் இயங்குகிறது.

இந்த அடிப்படையில் சில வேறுபாடுகளைச் சுட்டிக் காட்டுவதே இந்த எழுத்தின் நோக்கமும் பயனுமாக அமையவேண்டும் என்று நினைக்கிறேன்.

திட்டமிட்ட வாழ்க்கை

‘குடும்ப நலத் திட்டங்கள் என்பது ஒரு தேசத்தின் அடிப்படையாகும். இங்கு சந்துக்கு ஒரு விளம்பரம், இரண்டுக்கு மேல் வேண்டாம் என்று வீதி முடுக்குகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. சின்னஞ் சிறுசுகள் அர்த்தமில்லாத இந்த வாசகங்களைப் பால பாடமாகப் பயிலும் விளம்பரங்கள் பெருகிவிட்டன.