உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இங்கிலாந்தில் சில மாதங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

மிகுதியாகிவிடும். மனோநிலை கெட்டுப் பைத்தியம் பிடிக்கிறவர்களுக்கு வைத்தியர்கள் தூக்க மருந்து கொடுக்கிறார்கள். ஏன் அவன் மனோநிலையின் வேகத்தைக் குறைத்து ஓய்வு தருவதற்கே. அதனால் குடியும் மனித வாழ்வுக்குத் தேவையானதாகவே தெரிகிறது. நம்முடைய பொருளாதாரம் இந்தக் கூடுதல் செலவுகளைத் தாங்கும் ஆற்றலைத் தரவில்லை. அதனால் அதற்குப் பழக்கமாகித் தம் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துக் கொள்கின்றனர். ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்ற பிரச்சாரத்தோடு அந்தத் தொழிலை அனுமதிக்க வேண்டியுள்ளது.

கடவுள் மயக்கம்

இந்தக் குடிபோதை மட்டும் மக்கள் கவலையைப் போக்குவது இல்லை. மற்றொரு தீர்வு நம் மக்களுக்கு உறு துணையாக இருக்கிறது. நிறைய கவலைகளும் அச்சமும் அவநம்பிக்கைகளும் மிகும்போது மனத்திற்கு ஓய்வும் நம்பிக்கையும் தேவைப்படுகின்றன. பகுத்தறிவு வாதம் இவர் களைத் தடுப்பது இல்லை. ‘தெய்வ நம்பிக்கை’ மிகுதியாகிறது. இதைப் போன்ற அச்சந்தரும் வாழ்க்கை அதிர்ச்சிகளும் அவர்களுக்கு ஏற்பட வாய்ப்பில்லை. அதனால் தெய்வ நம்பிக்கை, கோயில் வழிபாடு இவற்றிற்கு (முக்கியத்துவம் கொடுப்பதாகத் தெரியவில்லை. கிறித்துவ வழிபாட்டு ஆலயங்கள் இருக்கின்றன. அங்குச் செல்வது ஒரு சடங்காக வாழ்க்கை ஒழுங்குமுறையாக உள்ளதே தவிர நம்மைப் போல் அதை மிகைப்படுத்துவது இல்லை. கடவுள் உண்டு இல்லை என்ற வாதங்களில் அவர்கள் தலையிடுவது இல்லை. கடவுள் மிகப் பெரியவர். (God is great) என்று சொல்லிவிட்டுத் தம் வாழ்க்கையைக் கவனித்துக் கொள்கின்றனர்.

நமக்கு இந்த நம்பிக்கை தேவைப்படுகின்றது, இல்லாவிட்டால் இந்தியாவில் சராசரி மனிதர்கள் வாழ