97
"என் கணவன் என்னை நம்பவேண்டுமே” என்றாள்.
எனக்குப் புரியத் தொடங்கியது. அவள் எப்படி என் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய முடியும்?
இப்படி எத்தனையோ அனுபவங்கள் நமக்கு சுவாரசியத்தைத் தருகிறது. இதைப் போன்ற விபரீதங்களை அங்கு நாம் அனுபவிக்க முடியாது. எல்லாம் ஒழுங்காக நடைபெறும்போது அது புறவளர்ச்சிக்கு நல்லது தான். மாற்றங்கள் இருந்தால்தானே சுவையே இருக்கும். அந்த ஒழுங்கு முறைகள் நமக்குப் பல சமயங்களில் சலிப்பையே தருகின்றன.
நம் கார் டிரைவர்கள், பஸ் ஓட்டிகள் முன்னால் (செல்லும் குறுக்குவாசியைப் பார்த்துக் கேட்பான்.
“ஏன்’ பா சொல்லிவிட்டு வந்தியா?” என்பான். இது போன்ற பழக்கமான அறிவுரைகளை எல்லாம் அங்கே காணமுடியவில்லை.
போலீசு ரொம்பவும் கண்டிப்பாக இருப்பது நமக்குப் பழக்கம் இல்லை; தவறு செய்தால், கார்களைத் தவறான இடத்தில் பார்க் செய்துவிட்டால் உடனே வந்து பெயர் எழுதிக்கொண்டு ‘கேசு’ பதிவு செய்துவிடுகிறார்கள், ஈவு இரக்கமற்ற நிலையில் நடந்து கொள்கிறார்கள். காசு கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க முடியாது. கண்டிப்பாக நடந்து கொள்கிறார்கள். எனினும் இங்கு உள்ள சூழ்நிலைவைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது. கடமையைச் செம்மையாகச் செய்கிறார்கள் என்று கொல்வதுதான் பொருந்தும். அப்படி அவர்கள் பழகிவிட்டார்கள்; இவர்கள் இப்படிப் பழகிவிட்டார்கள்; அவ்வளவுதான் வேறுபாடு.