பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அவள் என்னவோ சொல்ல வாயெடுத்தாள். அந் நேரத்தில், கீழ்த்தளத்தில் இருந்த வீட்டின் சொந்தக்காரர் மாடிக்கு வந்து சேர்ந்தார். அன்றாடப் பத்திரிகைச் செய்திகளை இனாமாகப் படித்துச் செல்லும் மாமூல்படி அன்றும் வந்தார் அவர். அவருக்கும் பெயர் உண்டு. அது குஞ்சிதபாதம் என்பதாகும். வந்த மனிதர் தம்முடைய பன்றி முடியை-நரை திரண்டிருந்த அம்முடியை-இடது கைவிரல் கொண்டு கோதி விட்டவராக ஊர்வசியை 'ஒரு மாதிரி'யாகப் பார்த்தார்.

'இந்த நாடகக்காரி எங்கே இங்கு வந்தது ?' என்ற ஐயப்பாட்டோடு அவர் பார்வை இருந்ததை அம்பலத் தரசன். யூகம் செய்து கொள்ளத் தவறவில்லை.

‘ராத்திரி நாடகத்திலே நடிச்ச பெண்தானே இது?’ என்று கேட்டார் குஞ்சிதயாதம்.

“ஆமாங்க அந்தப் பெண்ணே தான். எனக்குச் சொந்தம் முறைமைக்காரப் பெண்ணுங்கூட” என்றான் அம்பலத்தான். வீட்டுக்காரர் உண்டாக்கிய அதிர்ச்சி இன்னமும் அப்படியே இருந்தது.

“ஓஹோ, உங்க அம்மா ஊரிலேருந்து லெட்டர் போட்டிருந்ததாகச் சொன்னிங்களே, அது இந்தப் பொண்ணைப் பத்தித்தானா லார்?”

“ஆமாங்க !’

கேள்வி கேட்ட புண்ணியவானே ஒரு பதிலுக்கும் கோடி காட்டி விடவே, அம்பலத்தரசன் மேற்கொண்டு விடை சொல்லச் சிரமப்படவில்லை.

“இதுக்குப் பேர் ?”

“இருக்குங்க. ஊர்வசின்னு பேர்!

“சுந்தரியின்னு சொன்னாங்களே!”