பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


"நம் திட்டத்தைப் பத்தி நீங்க சொல்லலே, ஆகை யாலே நானே சொல்லிடுறேன். இப்போ நான் என்னோட ஜாகைக்குப் போகவேனும் என்னை ராத்திரி பூராவும் காணாமல் என்னைப் பெற்ற தாய் தவிச்சுக் கிட்டிருப்பாங்க” என்றாள் அவள். அவள் பேச்சில் கலவரம் இருந்தது.

"உன்னை உங்க அம்மா காணாமல் தவிச்சுக்கிட்டிருக் கிறதாக பூமிநாதன் கொஞ்சம் முந்தி வழியிலேயே கண்டு சொன்னார்" என்றான் அம்பலத்தரசன், சொல்லிக் கொண்டே அவளை நோக்கினான் அவன்.

அவளுடைய முகம் கணப் பொழுது துணுக்குற்றது. பின், தன் திகிலை மாற்றிய வண்ணம், "அப்படியா?' என்றாள். அவள் குரல் சகஜமாகப் படவில்லை அவனுக்கு.

‘உம்’ கொட்டினான் அவன். பாவம், தன்னைக் காணாமல் வேதனைப்பட்ட அன்னைக்காக அவள் இவ் வாறு திகிலடைந்திருக்க வேண்டும்!”

“அப்படியென்றால் நீ நேரத்தோடே புறப்படு, ஊர்வசி!’’

அவள் விநயமாகப் புன்னகை செய்துவிட்டு, “நான் மட்டும் புறப்படவா? என்னோடே நீங்களும் வந்தாக வேணுமுங்க” என்றும் அறிவித்தாள்.

சற்றேனும் சிந்திக்கவில்லை அவன். இந்த முடிவை அவன் அவளிடமிருந்து எதிர்நோக்கியிருந்தவன் போன்று: "ஆகட்டும் . நாம் இருவருமே புறப்படலாம் இதோ. ஒரு நிமிஷத்தில் குளித்து விட்டு வந்து விடுகிறேன்' என்றான் அவன.

"பத்து நிமிஷங்களுக்குள் நீங்க குளிச்சிட்டு வந்தால் யதேஷ்டம்” என்றாள் அவள்.