பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

“இருங்க துணிகளை எடுத்துத் தாரேன்" என்று சொல்லி அறையின் வடமூலையில் காணப்பட்ட திறந் திருந்த தோல் பெட்டியைத் தடவினாள். மேலாக இருந்த ஃபின்லே வேஷ்டியையும் ஸில்க் ஜிப்பாவையும் எடுத்து நீட்டினாள். "இருங்க, இருங்க” என்று சொல்லிக்கொண்டே அடியில் கையைத் திணித்து எதையோ தேடினாள். புகைப்பட மொன்று சிதறி வந்து தரையில் நழுவியது. பார்த்தாள். அது ஓர் அழகியின் படம்! பார்த்துவிட்டு, அதைப் பெட் டியில் வைத்தாள், பின்னர் அவள் மறுபடியும் துழாவினாள்.

“ஊர்வசி, நீ தேடுறது அங்கே இல்லை. பனியனும் அன்டர்வேறாம் அடுத்த அறையில் இருக்கு" என்று சொல்லிக்கொண்டே அவன் நகர்த்து திரும்பினான். அவனோடு சலவை வேட்டியும் சென்றது. மீண்டான் தும்பைப் பூவாகப் பளிச்சிட்டது வேஷ்டி.

‘தலை வாரிக்கங்க” என்று கூறி காந்தரால் ஹேர் ஆயில் புட்டியை கழற்றி வைத்தாள்.

“ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு, அறைக்கு வெளியே வந்தான். உதய சூரியனின் திசை நோக்கிக் கரங் கூப்பிக் கை தொழுதான். ஒரு நிமிஷம் அல்ல, ஒன்பது நிமிஷங்கள் வரை அவன் பிரார்த்தனை செய்தான். பிறகு திரும்பி வந்தான். வாரிக் கொண்டான் - ஆமாம், தலை முடியைத்தான் வாரிக் கொண்டான். சுருட்டை முடிகளில் அற்புதமாக வாசம் கமழ்ந்தது.

“நான்கூட இந்த ஆயில்தான் உபயோகிப்பேன்.”

“ஓஹோ’ என்று சொல்லி விபூதி மடலிலிருந்து ஒரு துளியை நகக் கண் கொண்டு எடுத்துப் பூசிக்கொண்டான்.

இ - 7