பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

"நீ விபூதி பூசிக் கொள்றது தானே?”

"ஆஹா!"

திருநீறு ஏந்தப் பூங்கரம் நீட்டினாள் ஏந்திழை.

ஆனால் அதற்கு வேலையின்றி அவனே அவளுக்கு பூசி விட்டான்.

"நம்ம ரெண்டு பேருக்கும் இந்தத் திருநீறும் தெய்வ மும் தான் இனிக் காப்பு"என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரைத்தான் அவன்.

சிவந்த நெற்றியில் வெண்ணிறு துலாம்பரமாக விளங் கிற்று.

“இனிமேலாச்சும் இ ந் த த் திருநீறும் தெய்வமும் என்னைக் காக்கட்டும்" என்றாள் ஊர்வசி, வேதனையின் நெட்டுயிர்ப்புடன்.

“கடந்தது கனவாகவே தொலையட்டும். இனி நல்லதே தடக்கும்னு நம்பு" என்று தேற்றினான் அவன்.

அவள் தன்னை மறந்து கைகூப்பினாள். அவளுக்கு நேரே நின்வறவன் அம்பலத்தரசனே! அவன் சற்று தள்ளி நிற்க முனைந்தான். தெய்வத்துக்குக் குறுக்கே நிற்க ஒப்பவில்லை அவன்.

“உங்களைக் கும்பிடத்தான் கை குவிச்சேன். அப் படியே நில்லுங்க, நகராமல்!"பாங்குடன் அஞ்சலி செலுத்தினாள், பாவை.

அவன் மனம் உருகியது.

“புறப்படலாமா ?”

ஒ!"